Music & Musings

ஒரு கொளை கதை – பாகம் 5
ழ ள. இப்பக்கூட பாருங்க, வூட்ல இந்த கொல கதய எப்படி உங்களுக்கு எளுதி, ச, எழுதி புரியவைக்கறதுன்னு நான் ரேழியில ஓரமா இருட்டுல சுவத்த பார்த்து யோசனையில இருந்தேன். அம்மணி தளுக்கா என்னைய கடந்து வாசலுக்கு போகையில, என்ன இன்னிக்கு இருட்டு நிறம் மிக்க கருப்பாயிருக்கு, இதான் டார்க் மேட்டரா, அதான் இங்கன இருக்கே பின்ன ஏன் பிஸிஸிஸ்டுங்க இதக்காணோம்னு தேடிகிட்டிருக்காவ, அப்படினு ஏதொ மொணமொணத்துகினே போனாவ. அங்க சோழியாடும் தோழியாண்ட வளவள கலகலன்னு பேச்சு. ரைட்விங் லிபர்டேரியன். சூலம் மாதிரிதான் பொட்டு வைப்பாக. அவிங்க நிரம்ப படிச்சவிங்க. கொஞ்சமாத்தான் புரிஞ்சிப்பாக. பேர் சாகடிக்கரா கோஷ்.

கலியாணத்துக்கு முந்திச்சி, பூர்வாசிரமத்தில் பேர் சாகரிக்கான்னுதான் இருந்திச்சி. இல்லற சிரமத்தில அடுப்படியில உலைய ஊதி ஊதி, பொகையில கண்டபடி கார்பண்டைஆக்ஸைட யார்சொல்லியும் கேக்காம சுவாசிச்சதுல (ஐம் லிபர்டேரியன்; ஹௌ டூ வீ நோ சீஓடூ இஸ் பேட் ஃபார் அஸ்?) க்ளைமேட்டே சேஞ்சாயி போத்தாவு. அதான், சூழ்நிலையே மாறிப்போச்சிங்கறேன். பொறவு ஊர்சனம் நம்ம ப்ளைட்ட பாத்து, வலது-இறக்கை நியதிப்படி நியூமராலஜியில பேர மாத்திடாய்ங்க.

மேற்படி சாகடிக்கரா தம் அறிவொளி அணங்கைகளுடன் அன்று சிட்டியில் ஐந்துநட்சத்திரத்தில் செல்லவிருக்கும் பார்ட்டி பற்றி அளவளாவிக்கொண்டிருக்கையில் ரேழியில் டார்க்மேட்டரா இருந்தபடி ஒட்டு கேட்டதில், காத்துவாக்குல அவனைய இன்னிக்கு நிச்சயம் ஒளிச்சுடனும் அப்படின்னு ஏதோ கேட்டுச்சு. சிலீர்னுது.

என்னடா அவிங்க தினம் இருட்டுனதும் விளையாடும் ஒளிஞ்சிபுடிச்சுல நம்மளையும் இன்னிக்கி சேத்துக்கப்போறாங்களா. எங்க ஒளிஞ்சுக்கறது? புடிக்கிறது யாரு? இல்ல ஏதாவது இன்கம்டாக்ஸ் மேட்டரா. இருக்குற சொத்துபத்துக்கெல்லாம் ஏகசக்ராதிபதி நான்தான்னு உள்ளூர் ஆர்டிஓ ஆபீஸ்லர்ந்து எவனாவது ஐஆரெஸ்சுக்கு மேட்டர லீக்கிட்டானா? வூட்டுல சுதாரிச்சுகினு குதிருல குந்தவைக்கபோறாவுளா, உள்ளே இருக்கற நெல்ல என்ன செய்வாக. என்னோட இருக்க நெல்லுக்கு ஒத்துக்காதே. சீ, மேலபடாத, தள்ளிப்படு ஒரே சோப்பு நாத்தம் வெளியேபோன்னு என்னைய அரிச்சு எடுக்குமே. அப்படி இப்படினு ஒரே யோசனை.

ஆனது ஆவட்டும்னு அம்மணி என்ன மேட்டர்னு அவ சிநேகிதியாண்ட வினவினேன். அவ பெயர் சந்திரமுகி. முட்டை கண்ணி. அவளும் நம்ம ரகசிய சிநேகிகளில் ஒருத்தி. அவளோட தொலைந்துபோன கற்பை ஒருமுறை காண்டமெல்லாம் உபயோகித்து போராடி காப்பாற்றி கண்டுபிடித்துக் கெடுத்திருக்கேன், சே, கொடுத்திருக்கிறேன்.

ரேழியில் இருளில் ஒதுக்கி சாகடிக்கரா சொன்னத அப்படியே சொல்லு. என்னைய எதுக்கு ஒளிச்சுடனும்?

முட்டை கண்ணை உருட்டி, வாயைதிறக்காமல் பெரிதாக சிரித்து சந்திரமுகி ஒட்டு கேட்டையான்னா. திடீர்னு சாகடிக்கராவா மாறி, ரௌத்திரமா உன்னைய ஒளிச்சுடனும்னு சொல்லலடா, உன்னைய ஒழிச்சுடனும்ன்னுல சொன்னேன். நாயே. உலகம் எப்படிபோனால் உனக்கென்ன. என் தமிழை ஏன் உச்சரிப்பு கொளை செய்கிறாய். இதற்கே உன்னை குதிருனுள் உயிருடன் அடக்கம் செய்யவேண்டும். இரவாகட்டும், ஊரடங்கட்டும், செய்கிறேன் இன்றே. செத்துமடி ஆர்வக்கோளாரா, அரைவேக்காடா, ஆணுறைஅணிவாளா…

பளாரென்று அறைந்தேன். முழிச்சுக்கொண்ட சந்திரமுகி, நான் யாரு. இப்ப ஏதொ பன்னேன். என்ன பன்னேன் சொல்லுங்க, சொல்லுங்க…

ஒன்னுமில்ல ஒவராக்ட் பன்னே அவ்ளோதான். பிம்பத்துல செய்யமுடில, அதான் நிஜத்துல அடிச்சேன். சரி நீ போ.

அவள தேத்தினேனே தவிர எனக்கு சாகடிக்கராவின் ப்ளான் பத்தி அவ சொன்னத கேட்டதிலிருந்து உதறல். கொலையும் செய்வாள் பத்தினி. மெகாசீரியலே சொல்லியிருக்குது. ஒளிக்க மட்டுமில்ல ஒழிக்கவும் குதிர்தான் ஏத்த இடம். எனக்கே தெரியும்.  தூங்கையில குண்டுகட்டா குதிருகுள்ளார தாணியத்தோட தொகச்சிட்டாங்கன்னுவைய்யி, குதிர் சமாதியில், நெல் சுவாசம்தான். எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு ஆர்டிவோ ஐஆரெஸ் யாராண்டையாவது கூவி அவிங்க சந்தேகத்துலயாவது எட்டிப்பார்த்து உயிரோடு தப்பவைக்க நமக்கு பையன் இல்லை.

சாகடிக்கரா படிச்சவ. நேக்கடா என்னிக்கி நெருங்க விட்டிருக்கா.

கி.பி. 2000 வாக்கில் வாழ்ந்த சமூகத்தில் இறந்தவர்களை கையை காலை கட்டி, வீட்டில் குதிருனுள் புதைப்பது வழக்கம் என்று நம் எலும்புகளை வைத்து கி.பி. 4009இல் தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஆய்ஆய்டீ. புரஃபஸர் புத்தகத்தில் அடிக்குறிப்பாகிவிடும் சாத்தியம் மூன்றாவது மனக்கண்ணில் விரிந்தது.

எப்படி தப்பிப்பது இந்த தமிழச்சி, சே, தமிழ்-அடச்சீ கொலையிலிருந்து? யோஜன பன்னிகினு மல்லாக்க படுத்தேன்.

குதிர் இருக்கிறது என்றாலே புரிந்திருக்கும் உங்களுக்கு. எங்க வீட்டில் தினம் கைக்குத்தல் அரிசிதான். உரல் உலக்கை காம்பினேஷன்ல. ஆனா அந்த யந்திரம் கால யந்திரம். டைம் மிஷின். டம் மிஷின்னா நேரம் காட்ர வாட்ச் இல்ல. இது கடந்த-நிகழ்-எதிர்னு நம்மள பயணிக்கிற இயந்திரம். அதைவைத்து அரிசிகுத்தும் அக்காள் மகளுடன் எப்படி தப்பிப்பது என்று ஒரு திட்டம் வகுத்தேன். கனவில்.

புறவு சொல்லுதேன். ஏனெனில், தப்பிக்க தேவையிருக்கவில்லை. வெளியே சென்ற சாகடிக்கரா வரவில்லை திரும்பி உயிரோடு.

[தொடரும்]

[ஒரு கொளை கதை - பாகம் 4] [ பாகம் 3  | பாகம் 2  | பாகம் 1 ]

Posted in கதம்பம், கதை Tagged: கொலை கதை, தமிழ் கதை, தமிழ் சிறுகதை, தொடர்கதை, ஹாஸ்யம்

ஒரு கொளை கதை – பாகம் 4
ஆன் த பாசிபிள் மோடிவ்ஸ் ஆஃப் க்ளீஷே கில்லர் மூவிங் ஔட் ஆஃப் டமில்நடூ. அலுவலகத்தில் உள்ளேமட்டும் சர்குலேட் செய்யப்படும் வம்பிகையின் ஒரு கட்டுரை தலைப்பு. நான் ஏளுதினதுதான், சே, எழுதியதுதான். மொத்தமும் அனுமானங்களே. எள்ளளவு உண்மை இருக்கலாம். துப்பு (கெட்ட) பொழப்புல இப்டி அனுமானங்களையும் ரூமர்ஸையும் நம்பித்தான் டைம புஷ்ஷனும். க்ளீஷே கில்லர் ஏன் என்ஆர்ஐயிடம் சென்றிருப்பார்? என் யூகம், சே, ஊகம் இது…

தமிழ்நாட்டுள்ளார ஏதோ ஒரு உலகிலேயே தலை சிறந்த கிராமத்தில் ஒரு லெவல் வரை தமிழ் ஊடகக்கல்வி படிச்சுட்டு, அப்புறம் இந்தியாவில எங்கையுமே தம் மூளைக்கு ஏத்த வேலபாக்கமுடியாம, அமேரிக்கா, கனாடா ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா நாட்லலாம் போய் ஸாஃப்ட்வேரோ, அண்டர்வேரோ எதையோ மூளைய கசக்கி டிஸைன் செஞ்சுட்டு டாலர்ல வறுமையா நோட்ட எண்ணி தாய்நாட்டை நோக்கி பெருமூச்சு விட்டு தாம் தமிழ் படிச்ச பள்ளிக்கூடத்துக்கு வெள்ளை அடிக்க பணம் அனுப்பி, அது போய் சேர்ந்துச்சான்னு கமிட்டி போட்டு செக் செய்யராங்களே. பைந்தமிழ் கொளைகல் பலநடக்குதுன்னு அவிங்க ஒத்துக்கறாங்க என்ன. ஆனா என்ன, அவிங்களாலமட்டுதே கொளைய கண்டுகொள்ளமுடியும்னு நம்புதாங்க.

அவிங்க சனங்கள கூடசேத்து பைந்தமிழ கொளைகல வெளிக்கொணர பலவாறு முயற்சிக்கின்றனர், சே, முயல்கின்றனர்.

முதல் கட்டமாக, முருகன் டாலர ஹேண்ட்பேகேஜுல அடில துணைக்கு போட்டுகிணு, சலாக்கா ஃப்ளைட்ல பாக்கத்துல லாண்டாயி கஸ்டம் (இது வேற கஸ்டம்) செக்கில் ஸ்காட்சை காப்பாற்றி, வருடத்தில் சில மணித்துளிகள் ஹோம்வேர்ட் பௌண்டிற்கு வருகையில், இவர்கள் பேரம் செந்தமிழில்தான் பேசுவர்.

ஓட்டுநர்தகையீர், திரும்பு எருது சாலை அருகில் சிலவருடமாக சீரமைக்கப்படாமல் இருக்கும் மேம்பாலத்தின் இடப்பக்கமாக திரும்பி படகு கேளிக்கையில்ல சாலைவரை தாங்கள் நிர்வகிக்கும் தானியங்கி மூவுருளையில் எம்மை கொண்டுசெல்ல தாங்கள் எத்தனை கட்டணம், மற்றும் கையூட்டு எதிர்பார்ப்பீர்?

ஆட்டோ டிரைவரும் இங்கப்பார்ரா யேவர்ட்ஸ் பீர் தெர்யும் லேகர் பீர் தெர்யும். அது இன்னா பார்ப்-பீர்? சிட்டிக்கு புச்சா, மப்புலக்கீறியா என்று எல்லாம் வினவாமல், கட்டணம் பதினெட்டு கையூட்டு ஆயிரத்து எழுநூத்தி எண்பத்தி இரண்டு மொத்தமாக ஆயிரத்து என்நூறு ரூபாய் ஆகும் அன்பரே என்று பதிலுரைத்து, முறுவலித்து, கருத்தொருமித்து இவர்களை அழைத்துச்செல்கிறான்.

நம்ம லோக்கல் மொயில பேசுனா யிப்பொலா இங்கன யவ்னுக்கு புர்யுது?

க்ளீஷே கில்லர் என்ஆர்ஐ யாண்ட போயிருக்க சான்ஸ் ஜாஸ்தி மாமூ.

நடந்த இரண்டு கொளையும் கொலையான்னே நிச்சயமாய் சொல்லமுடியவில்லை. காரணமும் வையாபுரிபிள்ளையிலேர்ந்து கந்தசாமிபிள்ளைவரை ஒருபயபுள்ளைக்கும் புரிபடல. நாட் என் இன்க்லிங் யு நோ.

இதெல்லா(ம்) இருட்டுல தொலச்சத வெளிச்சத்ல தேட்ர வேலன்னு நாம போய் சொன்னா, நக்கல் சிரிப்போட, தமிழ் காவலாளிகள் மன்னரிடம் சொல்லி சிரச்சேதம் செஞ்சுடறாங்க. போட்டுக்கொடுத்தே பேர் வாங்கும் புலவர்கல் கல் தோன்றி மண் தோண்றா காலத்தே, சே, க்ளீஷேயா, சரி கள் தோண்றி (சாப்பிடும்)பன் தோண்றா காலத்திலிருந்தே இருக்கு. நமக்கு தமிழ் கொளைகல துப்பு துலக்குவதுல பிரமோஷன் வராது. கிடக்கட்டும் நம்ம என்ஆர்ஐ ப்ரதர்ஸ்தானே.

இந்த கதைல நடக்ர கொலைகள கண்டுபிடிச்சு தம்பி உப்புக்குசப்பாணி இல்ல, ஊருக்குதான் மாங்கொட்டைனு காட்டிடணும்னுதான் இந்தக் கதையவே சொல்றேன். சாரி, எழுதறேன்.

இத எளுதறேன் அப்படின்னும் நீங்க படிக்கலாம்.

மேலே சொல்லும்முன் ஒரு விஷயம். பேசரப்ப உங்களுக்கு ‘ழு’ ழுவா வருமில்ல? இல்ல ளு தானா? தமிழா பகறா. இல்ல தமிளா பகலா?

பார்ப்பன நாயே பரந்தாமன் பீயேன்னுலாம் அரிவாளோட கோவிச்சு கிளம்பிடாதீங்க. நான் ஆர்வக்கோளாரன். ஜாதி மதம் கடந்து தமிளில் ஊடுருவியிருப்பவன். உங்க வீட்டு கொல்லைப்பக்கத்திலும் மல்லிகைப்பூ மணக்கும். கொசு கடிக்கும். சட்டை கிழியாம அரிவாள முதுகுல சொருவிகினு, உபயோகமா வூட்டு பொழப்ப பாருங்க. ஏன்னா, நா கேக்கறது சப்பை மேட்டர். ஆனா கொளை மேட்டர்.

மேட்டர் இதான். ழ ள குழப்பத்துல ஒண்னு இல்ல, ரெண்டு இல்ல, எங்க ஏரியாவுல பல கொலைகள் நடந்திருக்கு. நடக்கவிருக்கு. எங்கவூட்டுல நடந்ததயே சொல்றேன்.

[தொடரும்]

[ ஒரு கொளை கதை – பாகம் 3  | பாகம் 2  | பாகம் 1 ]

Posted in கதை Tagged: கொலை கதை, தமிழ் கதை, தமிழ் சிறுகதை, தொடர்கதை, ஹாஸ்யம்

ஒரு கொளை கதை – பாகம் 3
அலைகடலோரம் அலைகள்மோத அகாலத்தில் அலங்கோலமாக அழகான அணங்கை, ஆடைவிலகி. இலைமறைகாய்போல. ஈக்கள்மொய்க்க. உயிரற்று. ஊக்குபிளந்து. எழில்தெரிய. ஏடாகூடமாக. ஐவர்கூடி. ஒருக்களிக்க. ஓடி. ஔவென்றுரைத்து ஃகுளில் அடக்கியிருந்த ரிவால்வரை கையில் எடுத்துக்கொண்டேன்.

பார்த்தவுடன் முதலில் கண்ணில் பட்டது அவளது கண்ணில்படக்கூடாதது. அறிவியல் தாண்டிய கவிதையான முரண்பாடு மனதை இன்ஸ்டண்டாய் கெடுத்தது. பீச் முழுவதும் சிலிக்கண்-டை-ஆக்ஸைடு. அதில் கிடப்பது இதுவரை உயிருடன் இருந்த இரண்டு சிலிக்கன் இம்ப்ளாண்ட்ஸ். நடுவில்… சிலிக்கன் வாலிக்காக அமெரிக்காவரை எதற்கு போகவேண்டும்…

ரிலாக்ஸ், கடமைக்கு நடுவுல கயமைக்கு இடம் கொடுக்காதே. அதட்டினேன் மனதை. அரைமனதுடன் கேட்டது.

குட்டை பாவாடை. கைக்குட்டை மேலாடை. தலைமுடி பாப். மற்றதெல்லாம் டாப். கனவுகளில் மிதந்து நிஜத்தில் செத்திருந்தாள்.

என்னடா, இலக்கியமா எழுதற. த்ரில்லர்தானடா. லைட் ரீடிங் இதெல்லாம். இலக்கியவாதிகள் படிக்கமாட்டாங்க. படிச்சாலும் வாய்க்குள்ளேயேதான் சிரிச்சுப்பாங்க. கூட வந்த லொடபடவா வெறுப்பேற்றினான். அவன் மைண்ட் ரீடர். பிணத்தை பார்க்க வருகையிலேயே, அதைக்கொண்டு மனதில் கதை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று புரிந்துவிட்டது.

ஏதாவது சொல்லவேண்டும் என்பதற்காக. பரவாயில்லை. ஆர்வக்கோளாருதானே நான். முடிந்தவரை துலக்குகிறேன். நாலு பேர் படிச்சா போதும்.

லொடபடவா விடவில்லை. இலக்கியமும் அப்படித்தாண்டா. நாலு பேர்தான் படிப்பாங்க.

நீதான் செந்தமிழ் கவி. நீயே சொல்லு. கொளை கதையை எப்டி இலக்கியமாக்குவது?

முதலில் இந்த செத்தத உயிரெழுத்துமூலமாவே சொல்ற இண்டலிஜெண்ட் கற்பனையில்லாத்தயும் கடாசிடனும். பீச்ல பாடி. போட்டிருப்பது பாடி னுலாம் எதுகை மோனை வசனம் போடக்கூடாது. இலக்கியம் தரம்கெட்டுப்போய் புதுக்கவிதையாயிடும்.

நீ சொன்னதையே நான் சொல்றேன் பார்த்துக்க. தொடங்கினான்.

திருவல்லிக்கேணிக் கடற்கரையில் கலாசாலைக்கு எதிரில் விஸ்தாரமாகப் பரவியுள்ள வெள்ளை மணல் தரையில் இன்று காலை கதிரவன் இரவின் மயக்கத்தில் கடல்நங்கையின் உன்மத்தத்தில் திளைத்து களைத்து உவகித்து கிளர்ந்து கிளம்பிய வேளையில் யௌவன ஸ்திரி ஒருத்தியின் சடலத்தை சுண்டல் சுந்தரர்கள் கண்டெடுத்துள்ளனர். உல்லாசமாக சயனித்தபடி இருப்பதைபோலிருந்த இருவத்தியோரு வயதையொட்டிய பருவ நங்கையின் வெளீர் மார்ப்பின் இளநீர் கொங்கைகளில் முலை தவிர மற்றதெல்லாம் கடைந்தெடுத்த மண். களிக்கும் மண். சிலிக்கன். அவளது வடிவம் அபரஞ்சித தங்கத்தை உருக்கி ஓடவிட்டது போல அழகான செந்நிறமும், இயற்கையான மினுமினுப்பும், வாளிப்பும், வனப்பும், யௌவன காலத்தில் புதுத்தன்மையும் வாய்த்திருந்தது. வாய் மழலை மாறாத குழந்தை வாய் தூக்கத்தில் கண்ணன் பூப்போடுகையில்  சிணுங்கி கோணுவது போல் இருந்தது. அவளது உருண்டை கன்னங்களில் தண்ணீர்ச் சுழல்கள் போன்ற வசீகரமான குழிவுகள், கழுத்தின் வழிவுகள், விசாலமான நெற்றியை கொண்ட பரந்த உருண்டை முகம்,  கருந்தடர்ந்த புருவவிற்கள் நானேற்றி பார்ப்பவர் மனதில் காமபானத்தை குறிதப்பாமல் அடித்தது. புத்தி கூர்மையை ஒத்த விழியின் கூர்மை அவளது விழியும் என் வாளும் சந்தித்தால் என் வாள் வாலையாட்டியபடி உரையினுள்சென்றுவிடுமோ என்று நினைக்கும் படியாக…

டேய், போதும்டா போதும். எனக்கு இலக்கியம் வேண்டாம். பயித்தியம் பிடிக்கும். எப்படிடா இப்படி கொட்றே.

எல்லாம் தாத்தா சொல்லிக்கொடுத்தது. வடுவூர் சாமித்துரை அய்யங்கார். துரைசாமின்னுதான் வைக்கிறதா இருந்திச்சாம். கெஜட்டுக்கு போகையில பாதையில கல் தடுக்கி டோங்கா குடைசாய்ந்து துரைசாமி சாமிதுரையா கவுந்துட்டார்.

சிரிக்காமல்தான் சொன்னான் லொடபடவா. நம்புவதா என்று யோசித்துமுடிக்கும் முன் அவன் இதுவரை கொட்டிய தமிழினால் சற்றென்று மனதில் ஒரு பொறி. கொல்வது க்ளீஷே கில்லரா இருக்குமோ.

க்ளீஷே கில்லர் சாகசமான ஆள். தமிழ் எழுத்தில் கதை எழுதறேன் கத்திரிக்காய் எழுதறேன், இலக்கியம் வடிக்கிறேன், இலக்கணம் வகுக்கறேன்னு வெள்ளையும் சொள்ளையுமாய், கொள்ளை கொள்ளையாக, காத்திருந்து பூத்துபோன, இலைமறைகாய் போல, அத்திபூத்தாப்புல, க்ளிஷேக்கள் பொங்க எழுதுவோரை சகட்டுமேனிக்கு போட்டுதள்ளுவான். தமிழ்நாட்டு மக்களின் வாத்சல்யத்தையும் பேராதரவையும் பெற்றவன். காட்டிக்கொடுக்க மறுத்தனர். இன்னனும் பிடிக்கமுடியவில்லை.

சிகரெட் பற்றவைத்து உடனே மனதின் பொறியை அணைத்தேன். க்ளீஷே கில்லரா இருக்க சான்ஸ் இல்லை. இறந்துகிடப்பது குட்டைப்பாவாடை பெண். சிலிக்கன் சேர்க்கையோட. இவளுக்கும் தமிழுக்கும் ஏணிவைத்தாலும் எட்டாது. சே, க்ளிஷே. இவள் தமிழால் செத்திருக்க முடியாது. தெரிந்தால்தானே.

தம்மடிக்கற நடாஷா ராஜ்குமார்னா நம்பலாம். தமிழ் கொளைன்னு.

என் தியரியில் வேறு ஒரு சிக்கலும் இருந்தது. சமீபகாலமாக மார்கெட் டல்லடிக்கிறது என்று க்ளீஷே கில்லர் வெளிநாட்டு தமிழார்வலர்கள், அதான் என்னார்ஐ, நான் ரிடர்ன் இண்டியன்ஸ் பக்கம் சென்றுவிட்டான் என்று டிபார்ட்மெண்டில் ரூமர்.

ரூமரில் சத்து இருக்கிறது. அமெரிக்காவில் தமிழார்வம் உள்ளவர் கம்மி. வெறியோடு அனேகர். கொளைக்கு சான்ஸ், சாரி, சாத்தியங்கள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

சே, க்ளீஷே.

[தொடரும்]

[பாகம் 1] [பாகம் 2] … [பாகம் 4] [பாகம் 5]

Posted in கதை Tagged: கொலை கதை, தமிழ் கதை, தமிழ் சிறுகதை, தொடர்கதை, ஹாஸ்யம்

ஒரு கொளை கதை – பாகம் 2
உன்னைப்போல் மற்றொருவன். நான்தான். ஊருக்கு வெடிவைக்கையில் மட்டும் வெள்ளை சட்டையில் உலவுவேன். மற்றபடி ஜீன்ஸ் டீ-ஷர்ட். காப்பி கலரில்.

எனக்கு செய்யும் தொழிலே கருமம். பல ரகசிய சிநேகிதிகள். ரகசியம்னா, பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜின்னு கபில்தேவ் மாதிரி அனைவருக்கும் தெரிந்த ரகசியம் இல்லை. எனக்கே எம்புட்டு சிநேகிதிகள்னு தெரியாது. அவ்ளோ ரகசியம்.

ஆரம்ப காலத்தில் போன்கால்கள் மட்டும் சிநேகமாக தேவைகளை சொல்லும். நான் செவிமடுப்பேன். அழகிய குமரிகள் தொலைக்கும் கொண்டை ஊசி, செல்லிடைபேசி மற்றும் நாய் ஃப்ரெண்ட், பாய் ஃபிரெண்ட் என்று பலதை துப்புதுலக்கி கண்டுபிடித்து தருவது என் வேலையாய் இருந்தது. நாளடைவில் தொழில் சூடு பிடித்து, டெலிபோன் பில் எகிறி, வைர்லெஸ் ஆகி பிறகு டெலிபோன்லெஸ் ஆகி, நேரடியாகவே சிநேகதிகளிடம் தொடர்புகொண்டேன். அவர்களது அழகிய கணவர்கள் வேறு தொடர்பு வைத்துள்ளனரா, அந்தப்பெண் நம் கஸ்டமரைவிட அழகா, டைகர் பாம் போட்டு கணவன்மார்களின் மார்பு சூடாகும்வரை உள்ளும் புறமும் தடவி விடுகிறார்களா… இப்படி மார்பு சைஸ்வரை அளந்து சொல்லவேண்டும். என் கஸ்டமர்கள் பலவேளைகளில் கஷ்டமர்கள்.

ஆனால் ஒன்று, இப்படி தீவிரமாக துப்புதுலக்கியதில் சைட் எஃபெக்டாய் தன்னிச்சயாக பல தகவல்கள் என்னை கண்டுரைந்தது. உதாரணத்திற்கு, கோலிவுட்டில் மொத்த கதாநாயகிகள் எண்ணிக்கை என்ன (63), இதில் தமிழ் பேசத்தெரியாத கதாநாயகிகள் எவ்வளவு பேர் (50), பேசவே தெரியாத நாயகிகள் எவ்வளவு (34), பேசமட்டுமே தெரிந்த நாயகிகள் எவ்வளவு (29), மார்க்கெட் ஊத்திக்கொண்ட நாயகிகள் எவ்வளவு (13), முன்னர் சொன்ன அந்த 50யையும் இந்த 13ஐயும் கூட்டினால் வருவது 63ஆ… இதுவரை ராக்கி சாவந்தை பப்ளிக்காக எவ்வளவு பேர் முத்தமிட்டுள்ளனர் (708), பிரைவேட்டா? (0), கலியாணத்திற்கு அடுத்த சுவயம்வரத்தில் ரஜபுத்திர ராணாபிராதப் சிங் வரும்வரை வெய்ட்பன்னுவது உண்மையா, இதே ரேஞ்சில் போய் பெயரை பாக்கி சாவந்த்னு நிஜ கலியாணத்துல அறிவிப்பாரா? டீவி ரிப்போர்டர்கள் பெயர்கள் ஏன் கோமளவள்ளி, பூத்தாள், பிரத்தியங்கராதேவி என்றெல்லாம் இருப்பதில்லை, ஆயிஷா டாக்கியா தன் பெயரை ஆயிஷா சாப்டியா என்று மாற்றிக்கொள்ளப்போவது நிஜமா என்பது போன்ற பட்டியல், புள்ளி விவரம் நமக்கு அத்துப்படி. பிலிம் நியூஸ் ஆனந்தன், லென்ஸ் மாமா, துணுக்கு மூட்டை என்று பலர் நமக்கு போன் போட்டுள்ளனர். எல்லாம் ராங் நம்பர்.

சொல்ல மறந்துட்டேனே. மேல் பத்தியில் அத்தனை எவ்வளவும் எத்தனைன்னு இருக்கனும். அல்லாமே எண்ணிக்கை. சொன்னேனே இது கொளை கதைன்னு. காலத்தின் கோலம். வக்த் கா ரங்கோலி. தற்செயல் உதாசீனத்தின் நிகழ்வு. ரைச்சியஸ் அபதி. படித்தவுடன் தமிழார்வலர்கள் ’சட்டில்’ என்று ஈமெயில் அனுப்பிக்கொள்வர்.

நல்லவேளை, இப்படி நாகரீக நாரீமணிகள் நலங்கிள்ளியாக இருந்த என்னை ஒரு திருப்பத்தில், டர்ன்புல்ஸ் ரோடு சிக்னலாண்ட என்று நினைக்கிறேன், மாரார் கறாராக பிடித்துவிட்டார். சைக்கிளில் லைட் இல்லை.

அவனவன் சைக்கிளே இல்லாம போறான், அவனெயல்லாம் வுட்ருங்க. என்னய புடிங்க. என்றேன். பளார் என்று தன்னை அறைந்துகொண்ட மாரார் சீரியசாகி, எவ்வளவு பேர் சைக்கிள் இல்லாமல் போகிறார்கள்னு உனக்கு நெஜமாகவே தெரியுமா என்றார். தெரியும், மூனு கோடியே இருபத்தியேழு லட்சத்து நாப்பத்திமூவாயிரத்தி என்னூற்றி எட்டுபேர். எப்ட்டிடா என்றார். சிட்டியில் சைக்கிள் கடைகளில் காத்து கருப்பு அடிக்க, பஞ்சர் ஜிஞ்ஜர் போட என்று தினம் எவ்வளவு சைக்கிள் வருகிறதென்று ஒரு மாதம் கணக்கெடுத்தேன். அவர்கள் கை, கணக்கு சுத்தம். ஐ.எஸ்.ஓ. எல்லாம் வைத்திருக்கின்றனர். அதை சிட்டி மக்கள் தொகையிலிருந்து கழித்துவிட்டால் மேலே சொன்ன…

சும்மா பீலாதான், என்பதை இப்படி சொன்னேன்.

மாரார் மார்போடு ஆலிங்கணம் செய்து கொண்டார். தொப்பை ஆரோக்கியமாக முட்டியது. இன்னிலேர்ந்து நீ நிஜ துப்புதுலக்கி. கொலை கொள்ளை அல்லாத்தையும் துலக்கு. இந்தா, இந்த புல்லட் புரூப் உள்ளாடையை போட்டுக்கோ. நவநீதகிருஷ்ணன் உனக்கு அனுக்கிரகம் செய்வார்.

அங்கு தொடங்கியது எங்கள் நட்பு.

மறுநாள் அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். காரணம் உன்னைபோல் ஒருவன்.

நம்ம கொலைக்கு வரேன். கொலையான்னே தெர்லயே யின்னும்.

சிட்டியின் பிணக்கிடங்கு எங்கிருக்கிறது அதில் எத்தனை பிணங்கள் என்று எனக்கு அத்துப்படி. பிணம்தின்னா கழுகு நான். அல்லாத்தயும் பாத்துகீறேன்.

அதனால்தான் யமனேரும் வாகனமாய் தோல்தடித்துபோய் முதல் பாகத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட, பாலூ கரடி லொடபடவா என்னை காரில் கூட்டிச்சென்று காட்டிய இந்த பொணத்தை பார்க்கையில் முதலிலேயே சந்தேகம் வரவில்லை.

உடலில் மல, ஜல, சுவாச, துவாரங்கள் போக வேறு எந்த துப்பாக்கி தோட்டா துளைகளும் இல்லை. கத்திக்குத்து இல்லை. காயம் இல்லை. இரவு கூடலின் கீறல் இல்லை. பொட்டு துணி இல்லை. பொட்டும் இல்லை (ஆம்பிளை). ஏதோ பூட்ட கேஸ். காதல் தோல்வியோ. இல்லை வெற்றியா. கொட்டைவரை சப்பினால் இப்படித்தான் சீக்கிரம் கசந்துடும்.

மனதில் ஒரு கறுப்பு பூனை ஓரமாய் மியாவ் என்று கொட்டாவி விட்டது.

மார்ச்சுவரியில் நல்ல நாள் மார்ச்சுவரை. நண்பர் கிறுக்கு மோகன் சொன்னார். அதற்குள் பிணத்தை பிரித்து எழுதிவிடவேண்டும். தமிழில் கொஞ்சம் கஷ்டம். இல்லை, கஸ்டம். சாரி, கச்டம். கஸ்மாலம், தமிழில் எப்படிய்யா என் கஷ்டத்தை ஷ் வராமல் எழுத்தில் சொல்வது? கடினம். பேச்ல சுளுவா சொல்லிருவேன். ஆனா இப்போலா நம்ம தமிள் பேச்ச யெவ(ன்) கேக்கறான். எவ(ன்) அகார குறுக்கம் இல்லாம பேசரான் முதல்ல. ‘எவ(ன்)’னே ‘யெவ(ன்)’ னு ‘ன’காரமே குறுங்கிடிச்சி. யார் பேசறத கேக்கனும்னு ஒரு விவஸ்த வேணாம். விவஸ்தை தமிழ் வார்த்தையா சொல்லு முதல. ஒரே உணர்ச்சியாகீது மாமூ.

இப்படி கொலை கொள்ளைக்காக செம்மொழியில் நான் அக்ளூடினேடிவாக ஆர்வக்கோளாருமிக்கியுணர்ச்சிவசப்பட்டுக்கொண்டிருக்கையில், நடந்தது இரண்டாவது கொலை.

[தொடரும்...]

[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] [பாகம் 4]

Posted in கதை Tagged: உன்னைப்போல் ஒருவன், கொலை கதை, சிறுகதை, தமிழ் கதை, தமிழ் சிறுகதை, தொடர்கதை, ஹாஸ்யம்

ஒரு கொளை கதை – பாகம் 1
பிரேதத்தை முதலில் பார்க்கையில் அது கொலை என்று எனக்கு உரைக்கவில்லை. அரைமயக்க நிலையில் இருந்த ’அதை’ பிரேதமா என்றே ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை. நான் கத்துகுட்டி. ஊர்ஜிதத்தையே ஜி யை விட்டொழித்து தெளிவான தமிழில், சிந்தித்து சரிபார்த்து நிருபணம் செய்துகொள்ளல் என்று பல வார்த்தைகளில் எனக்கு விளக்க தெரியாத வயது. அடுத்த வாக்கியம் எப்படி எழுதுவது என்று இதோ, இப்போது திணறுகிறேனே, அப்படித்தான் திணறினேன் அன்றும். பிரேதமா பொணமா என்று. கதையாய் தமிழில் எழுதினால் என் உயிருடன் முடிக்கமுடியுமா என்று.

சரி, கிடப்பது கிடக்கட்டும் கிழவிய தூக்கி அடுப்பில வைப்போம் என்று தொடங்கினேன்.

அன்று ஞாயிறு. இக்கதைக்கு கிழமை முக்கியம் இல்லை. சும்மா ஒரு பில்டப்புக்காக சொல்கிறேன். மறந்துவிடுங்கள். ஆனால் மேலே அடுப்பிலிட்ட கிழவியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கொளுத்துவோம் அவளை பிறகு. நமுத்துவிட்டது இப்போது விறகு.

காலையில் அவன் எழுந்ததும் நண்பன் லொடபடவா அவசரமா வந்து, ஆர்வக்கோளாரா (என் பெயர்), ஒரு திறப்புவிழா இருக்கு உன்னால முடியுமான்னான். தூக்கத்தில் இருக்கும் என்னையே விழாவிற்கு தலைமை தாங்க கூப்பிடறாங்களே, கலிகாலம்தான்னு குஷியா, சாரி சந்தோஷமா, சாரி, மகிழ்ச்சியாக கிழவியை கொளுத்த இருந்த விறகை உடைத்து ஒரு சிலாம்பை பல்லிடுக்கில் குத்திக்கொண்டு அவனோடு கிளம்பினேன்.

காரினுள் உட்கார்ந்ததும் என்னடாப்பா மேட்டர் என்றேன்.

அது எப்படி டப்பா மேட்டர்தான்னு உனக்கு தெரியும் என்றான்.

டாஷ்போடிலிருந்து பொடி டப்பாவை என்னிடம் கொடுத்து, பொடி கொஞ்சமும் கீழ விழாம சிரத்தையாக திற என்றான். எதுக்குடா? அதான் சொன்னேனே, ஒரு திறப்பு விழா இருக்குன்னு, முடியும்னியே அப்ப, ஆக்சுவலா அது விழா திறப்பு, சற்று மாற்றி சொல்லிட்டேன் என்று முகத்தை நேராக வைத்துக்கொண்டு சொன்னான்.

அடிக்க வந்தவனை ரோட்டைவிட்டு பார்வையை விலக்காமல் அதட்டினான். ஓட்டுநரை தொந்திரவு செய்யாதீர். கரம், சிறம், புறம் நீட்டாதீர். வண்டிப்பயணம் சுகமாகும். ஜன்னலை கண்ணாடியை ஏற்றிவிட்டுக்கோ. அது தோட்டா தாங்கி. என் உள்ளாடையைப்போல்…

லொடபடவா தனியாள். வசீகரன். அவனுக்கு பிடிக்கும் பெண்களுக்கு அவனை பகலில் பிடிப்பதில்லை. தலை மார்பு என்று எங்கு பார்த்தாலும் (நான் பார்த்த இடங்கள் அவ்வளவுதான்) கேசத்துடனும், பேச்சில் நேசத்துடனும், பார்ப்பதற்கு புசு புசுவென ஜங்கிள் புக்கில் வரும் பாப்ளு கரடி போல் இருப்பான். ஒரு முறை நிஜக்கரடி காணாமல் போய்விட்டது என்று கம்பிக்கு வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இவனை வாடகைக்கு ஒரு வாரம் கம்பிக்குள் அழைத்தார்கள் என்று அப்புறம் வண்டலூர் பக்கமே செல்வதில்லை.

ஆனாலும் லொடபடவா பிராணிதான். சந்தேக பிராணி. மூன்று கால். ஒருக்கால் இருக்கலாமோ என்று ஒரு கால் சேர்த்துக்கொண்டுள்ளான். தமிழ் மொழியின் பால் தீரா பற்று உடையவன். செந்தமிழ் என்றால் களவும் செய்வான். பைந்தமிழ் என்றால் கொலையும் செய்வான். ரோட்டில் சூப்பர் ஃபிகரை ஜொள்ளி எத்தனை அழகுடா மாமு என்றால், இல்லை, எத்தனை என்பது எண்ணிக்கையை குறிக்கும்டா, ’எவ்வளவு அழகு’ என்றுதாண்டா சொல்லனும் அவள.

சரியான தமிழில்தான் சாலையில் சைட் அடிப்பான்.

இப்போது என்னை பற்றி.

இருவது வருடம் இலாகாவில் திருட்டு கொலை துப்புதுலக்கிக்கொண்டிருக்கிறேன். இப்போது லொடபடவா காரில் பல் துலக்கிக்கொண்டிருக்கிறேன்.

சிட்டியின் பல கொலைகளை, சீரழிவை பார்த்திருக்கிறேன். மாரார், தொப்பையார், தொணதொணப்பையார் என்று பலர் ஆளுமையில் புல்லட் புருஃப் (உள்ளாடையுடன்) உடையணிந்து வியர்த்திருக்கிறேன். டென்ஷனானால் தம் அடிக்கும் டிவி ரிப்போர்ட்டர் நடாஷா ராஜ்குமாரிலிருந்து, அகமுடையானை செல்போனிலேயே அதட்டி தக்காளி, கீரை, பெங்களூர் கத்தரிக்காய் என்று தாங்கள் வீட்டில் பின்னிய ஒயர் கூடையில் வாங்கிவரச்சொல்லும் ஆத்துக்காரிகள் வரை பலர் என் அபிமானிகள். ரகசிய சிநேகிதிகள்.

இப்போதுகூட ரோட்டில் எங்கு பார்த்தாலும் என்னை நினைத்து அவர்கள் கணவர்களை சத்தமிட்டு முத்தமிடுவர். பிறகு வீடு சென்றதும் சத்தமின்றி மொத்திவிடுவர்.

என் தொழில் அப்படி.

என் மோட்டோ: தீவிர வாதத்திற்கு வாதம். சாதத்திற்கு சாதம். மொத்தத்தில், உன்னைப்போல் மற்றொருவன்.

[தொடரும்...]

[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] [பாகம் 4]

Posted in கதம்பம், கதை Tagged: கொலை கதை, சிறுகதை, தொடர்கதை, நகைச்சுவை, பகடி, ஹாஸ்யம்

ஆராய்ச்சி முடிவு
அறிவுமஹாசமுத்திரத்தினில் தெறிக்கும் திவலைகளில் திளைக்கும் என் ஆராய்ச்சிகளினால் மனிதத்திற்கு என்ன பயன்? பெற்றார் சுற்றாருக்கு புரிவதில்லை. உற்றார் உறவினர் முகத்தில் சலனமில்லை. ஆராய்ச்சிமுடிவினால் நிறுத்தும் ஆட்டோவில் என் கட்டணம் குறையவில்லை. கச்சா எண்ணை பற்றாக்குறை தீரப்போவதில்லை. உலகளாவிய சூடேற்றம் குறையப்போவதில்லை. உலகமோ உச்சியோ குளிரப்போவதில்லை. அறிவியலாளர்கள் என்று பறைசாற்றும் இந்த மேட்டிமைவாத மெருகூட்டல்களினால் என்னைவிடுத்து தனியொருவனுக்கு உணவுகிட்டப்போவதில்லை. ஜெகத்தினை அழித்திடவுமில்லை. சாதித்த தனிமையிலும் இனிமை காண இயலவில்லை.

எவ்வகை விளிம்புகளையும் எட்டாத, புதிர்களை விடுவிக்காத, புரிதல்களை மேம்பிக்காத என் ஆராய்ச்சி என்ற இந்த முக்கியானுஷ்டானத்தில் இவ்வாறு நியூட்டனின் புத்தகத்திற்கு பள பள அட்டைபோடுவதினால் என்ன பலன்? கிட்டப்பார்வையின் உற்றுநோக்கலில் சக ஆராய்ச்சியாளர்களின் அங்கீகரிப்பு பரிந்துரைகளில் எனக்கு ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியாகிறது. இதைவைத்து சிலகாலம் சிலரை ஏய்க்கலாம். பலமுறை பலகாலம் செய்தால், பலரை ஏய்க்கலாம். பொறாமை அஜீரணத்தில் சிலரை ஏப்பம் விடவும் வைக்கலாம். மிஞ்சினால், என்னைப்போல் வெப்பம் சார்ந்த அறிவுச்சலனங்களில் நாட்டமுள்ள கும்பலுக்குள் ஒரு ஜான் உயரமாகலாம்; சில மணித்துளிகளுக்கு. பிறகு சலனங்களின் கொந்தளிப்பில் இயற்கையாக வேரொருவர் எ(ழு)ம்புவார். தன்னிச்சையாக எனக்கு ஏப்பம் வரும்.

நேரங்களில் சிலர் துள்ளியும் குதிப்பார். எங்கள் உலகத்திலிருந்து தற்காலிகமாக வெளியே. குளத்து மீன்களைப்போல்.

இது ஒரு வேடிக்கை குளம். முழ்காதிருக்க தன்னிச்சையாக வாலையாட்டியபடி, தலையை மேலே உயர்தியபடி, சுற்றிலும் எதிரிகளை, புகழை, நுகர்ந்தபடி, துள்ளும் மீன்களடங்கியது. அவை துக்கத்திலும் தூக்கத்திலும் கண்களை மூடுவதில்லை. அயராது ஓடிக்கொண்டே இருக்கும்; குளத்தினுள் ஆரோக்கியமாக இருப்பதற்கு. கரையில் சிலர் இந்த உற்சாகத்தை வேடிக்கை பார்த்து பிரமிப்பர். குளத்தின் கலங்கலும் மீன்களின் இரத்தத்தை நீல நிறமாய் காட்டும். கரையிலிருந்து வேடிக்கையின் ஆழம் புரியாது.

குதிக்கும் மீன்களைப்பார்த்து குழந்தைகள் கைதட்டும். பிறகு மீன்களைப்போல் தாங்களும் குதித்து நீந்த முயலும். செயல்களின் வெளிப்படை ஆற்றலில் மேல்மட்ட நீர் ஆர்ப்பரிக்கும். பரமகுஷியாகி அங்கும் இங்கும் துள்ளி, சாதித்துவிட்ட களைப்பில் திளைத்து, மீன்கள் குளத்தினுள்ளே அமிழும். ஆழ்கையில் ஆழ்வார் எனத்தோன்றும்.

காலையில் சேவலாகி கொக்கரிக்கும். குளம் கரைவரை கொப்பளிக்கும். உயரே துள்ளும் மீன்கள் வலைகளில் எளிதில் சிக்கும். அவைகளின் முயற்சி திரு வினை ஆகும். வர்த்தகமயமாக்கலில் பொரிந்து, துண்டங்களாக டப்பிகளில் அமர்த்தப்பட்டு, சோமபானத்துடன் கனவான்களுக்கு விருந்துணவாகும். வலைகளை வெறுக்கும் சில பெரிய மீன்களும் உண்டு. இவை தூண்டிலுக்காக காத்திருந்து குதிக்கும். பிறகு, அகெதெமியில் விருதுணவாகும்.

ஊரின் வளர்ச்சியில், ஆலைகளின் எழுச்சியில், கழிவுகள் பாதையமைத்து குளத்தினுள் சேரும். கழிவிரக்கத்தில் மீன்கள் பொறுக்கும். ஜொலிக்கும் கழிவில் பிறகு இரத்தினங்களை பொறுக்கும். இயற்கையின் மருட்சியில், பருவநிலை வரட்சியில் வெப்பசலனமற்று குளம் குட்டையாகி நாறும். மீன்கள் எலிகளாகி மிரளும். மூச்சு முட்டும். பெரியவை சிறியதை விழுங்கும். கற்றவை பெற்றவை நாடும். கற்றதை கரை(வ)தனில் கிடத்தும். துள்ளல் துணிவின்றி, தூண்டில் தேவையின்றி சில துறக்கும். பல இறக்கும்.

எப்படியும் குளத்தினின்று ஆத்மாக்கள் மீன்களாக வெளியேறுவதில்லை.

குழந்தைகள் பெரிதாகி கடந்து செல்லும் வேடிக்கை குளம்.

சிறுமீனைப் பெருமீனாம், சிறுமாயை பெருமாயை,

வற்றாத செல்வமே வாழ்க! நீ வாழ்க!

Posted in கதம்பம், சிந்தனை, வாழ்க்கை Tagged: அறிவியல், அறிவு, ஆராய்ச்சி, கட்டுரை, ஞானம், தமிழ் கட்டுரை

அறிவியல் டாட் இன்ஃபோ
அறிவியலிற்காக புதிய கூட்டுப்பதிவு வலைதளம்  [http://www.ariviyal.info] தொடங்கியுள்ளது பற்றி தமிழ் கூறும் வலையுலகம் (பிரபல வலையுலகிகள் ஆதரவில்) கேள்விப்பட்டிருக்கும்.

நானும் அங்கு ஆட்டத்தில் உண்டு. இதனால் இங்கு அவ்வப்போது எழுதிவந்த அறிவியல் பதிவுகளை சற்று தட்டி கொட்டி பட்டை தீட்டி அங்கு மாற்றுவது என்று முடிவு செய்துள்ளேன். தற்சமயம் அப்பதிவுகள் இங்கு மூடிவைக்கப்பட்டுள்ளன.

முன்பே இங்கு அப்பதிவுகளை சுட்டியிருந்த பதிவர்களுக்கு நன்றி. முடிந்தால், அறிவியல் தளத்தில் பிரதி-பதிவுகளுக்கு சுட்டிகளை மாற்றியமையுங்கள்.

இங்கு எப்போதும்போல் கர்நாடக இசை, சினிமா, வாழ்கை, ஹாஸ்யம் என்று சொச்ச விஷயங்கள் தொடரும்.

எனக்குமட்டும் வரும் ஸ்பெஷலான என் எழுத்தில்.

மற்ற பதிவர்களை போல்.

Posted in கதம்பம், விஞ்ஞானம் Tagged: அறிவியல்

ராண்டார் கை பேச்சு: தமிழ் சினிமாவும் அரசியலும்
தமிழ் சினிமாவின் மூத்த வரலாற்றாலரான ராண்டார் கை நேற்று தமிழ் சினிமாவும் அரசியலும் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசினார்.  அதை பாட்காஸ்டாக, இரண்டு பகுதியில், கீழே கொடுத்துள்ளேன்.

பகுதி ஒன்று (~ 25 நிமிடம்)

<object type='application/x-shockwave-flash' data='http://ommachi.wordpress.com/wp-content/plugins/audio-player/player.swf' width='290' height='24' id='audioplayer1'><param name='movie' value='http://ommachi.wordpress.com/wp-content/plugins/audio-player/player.swf' /><param name='FlashVars' value='&bg=0xf8f8f8&leftbg=0xeeeeee&lefticon=0x666666&rightbg=0xcccccc&rightbghover=0x999999&righticon=0x666666&righticonhover=0xffffff&text=0x666666&slider=0x666666&track=0xFFFFFF&border=0x666666&loader=0x9FFFB8&soundFile=http%3A%2F%2Farchives.nonoscience.info%2Fdocs2%2F01-talk-on-tamil-cinema-and-politics.mp3' /><param name='quality' value='high' /><param name='menu' value='false' /><param name='bgcolor' value='#FFFFFF' /></object>

பகுதி இரண்டு (~ 25 நிமிடம்)

<object type='application/x-shockwave-flash' data='http://ommachi.wordpress.com/wp-content/plugins/audio-player/player.swf' width='290' height='24' id='audioplayer1'><param name='movie' value='http://ommachi.wordpress.com/wp-content/plugins/audio-player/player.swf' /><param name='FlashVars' value='&bg=0xf8f8f8&leftbg=0xeeeeee&lefticon=0x666666&rightbg=0xcccccc&rightbghover=0x999999&righticon=0x666666&righticonhover=0xffffff&text=0x666666&slider=0x666666&track=0xFFFFFF&border=0x666666&loader=0x9FFFB8&soundFile=http%3A%2F%2Farchives.nonoscience.info%2Fdocs2%2F02-talk-on-tamil-cinema-and-politics.mp3' /><param name='quality' value='high' /><param name='menu' value='false' /><param name='bgcolor' value='#FFFFFF' /></object>

ராமதுரை எப்படி ப்ரிட்டிஷர்களின் வாயில் ராண்டார் காய் ஆகி பிறகு அவரே போகட்டும் என்று ராண்டார் கை யாக மாற்றிக்கொண்டார் என்பது முதல் சிவாஜி எம்ஜிஆர் கூண்டுக்கிளி ஏன் ஊத்திக்கொண்டது, பக்கம் பக்கமாக உணர்ச்சிகரமாக வசனம் பேசி கண்ணகியில் நடித்த கண்ணாம்பாவிற்கு தமிழ் தெரியாது (கேமாராவிற்கு பின்னால் பலகையில் படித்ததாம்), சிவாஜி ஸ்கிர்ப்டெல்லாம் பார்க்காமல் உதவியாளார் ஒருமுறை படித்த வசனத்தை மொத்தத்தையும் சொல்லிவிடுவார், 1918ற்கு முன்னர் சென்ஸார் இல்லாதததால் 143 முத்தக்காட்சிகள் கொண்ட படம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி (141தான் இருந்தது என்று வக்கீல் நண்பர் தியேட்டர் மானேஜரை மிரட்டினாராம்), நிர்வாண நடனமெல்லாம் இருந்தது என்று பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

மொத்தம் 12 பேர் இருந்தோம்.

வெளியே வருகையில் பேச்சை வலையில் வைப்பதற்கு அனுமதிக்காக பேசுகையில் இந்த உற்சாக மனிதர் “Blog?, ya, I also write one” என்றார்.

Posted in சினிமா Tagged: அரசியல், எம்ஜிஆர், சிவாஜி, தமிழ் சினிமா, பேச்சு, ராண்டார் கை

2008 சங்கீத சீசனின் பெஸ்ட் – என் பட்டியல்
மெட்ராஸ் மியூசிக் சீசன் என்பது ஒரு மாதத்திற்கும் மேல் நடக்கும் விஷயம். இதை எழுதுகையில் முடிவை நோக்கி நிறைய தொண்டை செருமல்களுடன் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. பத்து பதினைந்து சபாக்கள் நாளைக்கு ஐந்து கச்சேரி விதம், பத்திலிருந்து இருபது நாள் வரை கூடி சென்னையின் பல இடங்களில் நடத்துகையில் சீசனில் மொத்தம் ஆயிரம் கச்சேரிகளுக்கு மேல் நடந்திருக்கும். அவற்றில் நான் கேட்டது முப்பத்தியைந்து; மொத்தத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான சொற்பமே. என் சிறிய இசை காதுகளை நம்பி நான் தரவிருக்கும் அவற்றில் ஒரு பெஸ்ட் பட்டியல், சத்தியம் சாப்ட்வேரின் லாப கணக்கைவிட நிச்சயம் துல்லியமாக இருக்காது. ஒரளவிற்கு அனுமானிக்கக்கூடியதாக இருக்கலாம். மாத்யூ ஹைடனின் ஓய்வை போல.

நான் கேட்டவையிலிருந்து இதோ ஒரு பெஸ்ட் பட்டியல்.

ஆலாபனை

பிரசன்னா வெங்கட்ராமன், சாஸ்திரி ஹால் Dec 23, 3pm கச்சேரி; ராகம் – முகாரி; கீர்த்தனை: முரிபெமுகலே (தியாகராஜர்)

வளரும் கலைஞர் பிரசன்னாவினுடைய முயற்சி அபாரம். அவர் கட்டுக்கோப்பாக ஆக்கத்துடன் செய்த ஆலாபனை இந்த ராகத்தில் முசிரியாரின் முத்திரை குத்திய ஆலாபனைகளை நினைவுபடுத்தியது. ஆலாபனையில் நடுவில் எங்கோ முகாரியற்ற சஞ்சரங்களில் அவ்வபோது சுற்றிக்கொண்டிருந்தது சுலபமாக மன்னிக்கக்கூடியதே. நண்பர் என்னிடம் “அருண், முன்பொருமுறை பாவம் (bhAvam, not sin) என்றால் என்ன என்று வகுக்கமுடியுமா என்று கேட்டு படுத்தினியே, பாவம் என்றால் இதுதான் (பிரசன்னாவின் ஆலாபனை, சங்கீதம்)” என்றார்.

பக்கவாத்தியமும் (வயலின் சாருமதி ரகுராமன்,  மிருதங்கம் வி. சங்கரநாராயணன்) அருமையாகவே இருந்தது.

எல்லாம் சரியாக சென்றால், நிச்சயம் விரைவில் கர்நாடக இசையுலகில் பிரசன்னாஒரு ஸ்டார். வாழ்த்துக்கள்.

கீர்த்தனை பாடியதில்

டி.எம். கிருஷ்ணா, மியூசிக் அகதெமியில்; நாஜீவாதாரா (தியாகராஜர்), ராகம் – பிலஹரி

பிலஹரி ஆலாபனை சுமார்தான் என்றாலும் கீர்த்தனை விவரித்தவிதம் அபாரம். பக்கவாத்தியகாரர்களும் தருணத்திற்கேற்ப தங்களையே ஜெயித்துக்கொண்டார்கள். அதுவும் பல்லவியை பலவித பிரமிக்கதக்க சங்கதிகளாக கூட்டாக இசையொருமித்து  பொழிந்தது மெய்சிலிர்க்கும் மகோன்னதம்.

நிரவல் பாடியதில்

டி.எம். கிருஷ்ணா – பல கச்சேரிகள்

நிரவல் பாடுவது கடினம். பழையகால பெயர் வாங்கிய வித்வான்கள் கூட கீர்த்தனைகளை சங்கதிகள், ஸ்வரங்கள் என்று முடிந்தவரை மெருகேற்றிவிட்டு, நிரவல் என்ற ஆபரணத்தை அணிவிக்க முயன்று தோற்று பெயர் கெடாமல் தங்கள் இசை வாழ்க்கையையே வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ளனர்.  கச்சேரிகளில் கவனித்தீர்கள் என்றால் ஸ்வரகல்பனைகள் கூட சற்று இடக்காக அபூர்வமாக இருக்கும் ராகத்தில்கூட போட்டுவிடுவார்கள். ஆனால் நிரவல் அப்படி இல்லை. தெரிந்த ராகத்தில், குரு, டேப், எம்பீத்ரீ என்று சரிபார்த்து,  பழகிய பாட்டையில்தான் செய்வார்கள்.

தற்கால கர்நாடக இசை கச்சேரிகளில் டி.எம்.கிருஷ்ணா நிரவல் செய்வதை தன் தனி முத்திரையாக எடுத்துக்கொண்டுள்ளாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது. அயராமல் முயற்சித்து ஒவ்வொரு கச்சேரியிலும் அப்பகுதியை சிறப்படைய செய்கிறார். மற்றவர்களைவிட வித்தியாசம் இவரின் நிரவல்களில் இறுதியில் ஒரு பலஆவர்தன க்ளைமாக்ஸ் வெகுஜோராக வருகிறது. சில வருடங்கள் முன் வரை இறுதி ஆவர்தனங்களில் கீர்த்தனை ஆரம்பித்த  காலபிரமாணம் கூடி பாட்டு ஓடிவிடும். இப்போது அந்த கோளாரெல்லாம் சுத்தமாக குறைந்துவிட்டது. அருமையான ஸ்வரக்கோர்வைகளுடன்  ஆரவாரத்துடன் நிரவல் முடிகையில் அரங்கில் சரியான கரகோஷம்.

ஸ்வர கல்பனை

ஒருவருமில்லை. சுமாராக பலரும், நன்றாக சிலரும் ஸ்வரங்கள் பாடுகிறார்கள். மறுப்பதிற்கில்லை. ஆனால் அபாரமாக இந்த பகுதியை இந்த சீசனில் கேட்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இருவது இருவத்திஐந்து நிமிடம் தொடர்ந்து யோசனைகளும், கட்டுமானங்களும் திரும்பத் திரும்ப வராமல், விறுவிறுப்பு குறையாமல் சரளமாக பல பழங்கால வித்வான்கள் பாடுவார்கள். கேட்டிருக்கிறோம். நான் தேடுவது அப்படிப்பட்ட அலுப்பு தட்டாத ஒரு தருணத்தைதான். இதற்கேற்றவாரு கச்சேரிகளும் நாலைந்து மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாக குறைந்துவிட்டது. மெயின் உருப்படியில்கூட இருவதுநிமிடம் தம் கட்டி ஸ்வரம் போடுவதெல்லாம் தேவையில்லை. நெட்ருபோட்ட கோர்வைகளையும் ஸ்வர முன்மாதிரிகளையும் பாடி சீக்கிரம் முடித்துவிடலாம். எனக்கென்னவோ இப்போதுபாடும் இளம் வித்வான்கள் பலரை நாலைந்துமணிநேரம் கச்சேரி செய்யச்சொன்னால் நமக்கு அலுப்பு வந்து அவர்களின் ஸ்வரகல்பனை சாயம் வெளுத்துவிடும் என்று தோன்றுகிறது.

தனி ஆவர்தனம் (மிருதங்கம் மற்றும் உபபக்கவாத்தியம்)

நெய்வேலி வெங்கடேஷ் (மிருதங்கம்) மற்றும் பெங்களூர் ராஜசேகர் (முகர்சிங்); Dec 29 7 pm சஞ்சய் சுப்பிரமணியனின் மியூசிக் அகதெமி கச்சேரி.

இந்த தனி ஆவர்தனத்தின் தனித்தன்மை நான் இதுவரை கேட்டிராத பல (நல்ல சுஸ்வர) சத்தங்கள் முகர்சிங்கில் வந்ததுதான். அசாத்தியம். நெய்வேலி வெங்கடேஷை பாராட்டவேண்டும்.  சரியான அபிப்பிராயங்களும் கோர்வைகளும் வாசித்து, ராஜசேகரிடமிருந்து விஷயங்களை வெளிக்கொணர்ந்ததிற்கு.

கச்சேரி (அனைவரும், அனைத்து விஷயங்களிலும்)

டி.எம்.கிருஷ்ணா, ஆர்.கே.ஸ்ரீராம்குமார், அருண்பிரகாஷ், பி.எஸ்.புருஷோத்தமன்; Dec 27, 7 pm மியூசிக் அகதெமி கச்சேரி

மூச்சிற்கு மூன்று குறை சொல்லி தவறு புரிந்தாலும் வருந்தாதவர்களுக்கு, பாடகரை மட்டும் கவனித்துக்கொண்டு அதனால் மிருதங்கம் என்பது அடித்து தன் கவனத்தை திசைதிருப்பினால்தான் அது நன்றாக வாசிக்கப்படுவதாகவும், மிருதங்க தனி என்பது நடக்கும் கச்சேரியின் தன்மைக்கு அப்பாற்பட்டு எப்போதும் தறிகெட்டு வேகமாக இருக்கவேண்டும் என்றும் நினைப்பவர்களுக்கு,  அருண்பிரகாஷை ஏன் பாடகர்கள் விரும்பி போட்டுக்கொள்கிறார்கள் என்பது பிடிபட ஒரு ஜென்மம் பிடிக்கும்.

இரண்டு வருடம் முன்பு மியூசிக் அகதெமியில் கிருஷ்ணாவிற்கு வாசிக்கையில் அருண்பிரகாஷ் ஒரு தருணத்தில் ஒன்றுமே வாசிக்காமல் சும்மா இருந்ததுபோல பலருக்கு பட்டது. வலையில் இசை விவாதங்களில் சுருக்காக அவர் குறுக்காக கிழிக்கப்பட்டார். கற்பனையே ஓடவில்லை அவருக்கு என்று. பலர் கவனிக்கத்தவறுவது அவர் இடதுகை மிருதங்கக்காரர். சாதாரணமாக வைக்கப்படும் மைக் இடம் அவர் தொப்பியில் செய்வதை ஒலிப்பெருக்கியெடுத்துக்காட்டாது. அன்றும் அவர் நன்றாகத்தான் வாசித்தார். அரங்கில் கேட்கவில்லை (மேடையில் பக்கத்தில் அமர்ந்திருந்தால் தெரிந்திருக்கும்).

இந்த வருடமும் தொப்பி விளையாடியது. மைக் இரண்டு பக்கதிலும் இருந்ததால் திவ்வியமாக இருந்தது. பட்ஞபாதம் இல்லாமல் கவனித்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள், அவரை ஏன் வித்வான்கள் விரும்புகிறார்கள் என்று. ஒவ்வொடு கீர்த்தனைக்கு ஏற்றவாறு பிரமாணத்தை மட்டுமின்றி, வாசிக்கும் தன்மையை பாங்காக மாற்றிக்கொள்வது மிருதங்க வாசிப்பில் ஒரு உப சிறப்பம்சம். இதை சரிவர செய்வதற்கு சாகித்தியத்தை பற்றி ஒரு நுண்ணிய உணர்வு வேண்டும். சிலருக்கே மனமும் கையும் அப்படி அமையும். அவர்கள் வாசிக்கையில் கச்சேரி தூக்கும்.

அதேபோல கண்ட ஜாதி அட தாளத்தில் (மெயின் உருப்படி விரிபோனி பைரவி வர்ணம். இதைபற்றி பிறகு.) அவர் புருஷோத்தமனுடன் பகிர்ந்து வாசித்த தனியும் அழகாக, கச்சிதமாக, அமைதியாக இருந்தது.

சொடுக்கினால் அடுத்தவர்களை குறைசொல்லும் நண்பர் இருக்கிறார். மிருதங்கம் கற்றுக்கொள்வதாக மூன்று வருடமாக கூறுகிறார். பல பெரிய வித்வான்களை நிஜமாகவே வெளிப்படையாக ரசிப்பார். இவருக்கு அருண்பிரகாஷின் வாசிப்பில் அப்படி ஒன்றும் இல்லை என்று எண்ணம். கர்நாடக இசை நுணுக்கங்கள் நிறைந்தது. புரிய பொறுமையும் பல வருடங்களும் வேண்டும். கிட்டியதும் நண்பரின் எண்ணம் மாறிவிடும் என்று நினைக்கிறேன். சொகஸுகா ம்ருதங்க தாளாமு…

கச்சேரி பாடகர்

சஞ்சய் சுப்பிரமணியன் – பல கச்சேரிகள்

அநேக இசை சம்பத்துகளும், நுணுக்கங்களும், அறிவும் இருந்தும் சஞ்சய்  சுப்பிரமணியன் கர்நாடக இசையை சாமான்யர்களையும் திருப்திபடுத்துமாறு பாடுகிறார். ஆனால் பிரபலத்தினால் பல சபையில் பாடவேண்டிய நிர்பந்தங்கள் வரும். குரலும் மனமும் என்நேரமும் ஒத்துழைக்காமல், சீசனில் சில வேளைகளில் தன்னால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு சராசரிக்கும் மேலான இலக்கை விட குறைவான அளவையில் கச்சேரிகள் அமைந்துவிடும். ஸ்ரீகிருஷ்ணகான சபாவில் இந்த முறை அமைந்ததுபோல.

ஆனால் வித்தியாசத்திற்கும், சம்பிரதாயம் வழுவாத பலசரக்கிற்கும் சஞ்சய் கச்சேரியில் என்றும் பஞ்சமில்லை.  புதிதாக, வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆர்வத்தின் உந்துதலில் சஞ்சய் குறுகிய இடைவேளையில் உன்னதத்திலிருந்து கேலிக்குரியவற்றிர்க்கு இல்லையெனிலும் தவிர்க்கக்கூடியவற்றிர்க்கு தாவி சஞ்சரிப்பார். மியூசிக் அகதெமியின் காம்போதி ஆலாபனையில் செய்ததைபோல. ஆனால் இதை பெரிதுபடுத்த எனக்கு மனமில்லை. வித்தியாச முயற்சிகளில், ஆர்வத்தில், சிலவை தோற்று நம்மை படுத்தும். ஜெயிக்கையில் நம்மையும் உன்னதத்தில் உலவவிடும். கலையை விரிவுபடுத்தும்.

RTP (ராகம் தானம் பல்லவி)

டி. என். சேஷகோபாலன் – MFACயில் – ராகங்கள்: கமகக்கிரியா, ஸ்ரீ, பாகேஸ்ரீ

சங்கீத கலாநிதி இருவது வருடமாக தொடர்ந்து நினைவைவிட்டு நீங்காத கச்சேரிகளை கொடுத்துவந்த இடம் மைலாபூர் ஃபைனார்ட்ஸ் கிளப்.  தற்காலத்தில் கேட்டாலும் ரசிகர்கள் எங்கள் மனதில் ஓடுவது அவர் பல வருடம் பாடிய அழியாத இசை. நம்பமுடியாதவை நிகழும் என்றும், சாத்தியப்படாதவை படும் என்றும் மீண்டும் ஒரு முறை சென்றோம். இந்தமுறையும் சேஷகோபாலன் ஏமாற்றவில்லை. ஏகாந்தம்.

புதிய உருவாக்கம்

வசுந்த்ரா ராஜகோபால் – சில கச்சேரிகள்

இவற்றை பற்றி முன்பே வசுந்த்ரா ராஜகோபால் கச்சேரிகள் என்று ஒரு கட்டுரை எழுதிவிட்டேன்.

உருப்படிகள் மற்றும் சாஸ்திரீயம்

பரசாலா பொன்னம்மாள் – பல கச்சேரிகள்

ஹரிகேசநல்லூர்முத்தையா பாகவதரின் நேரடி சிஷ்யையான பரசாலா பொன்னம்மாளை பல சபாக்கள் பாட அழைத்திருந்தது திருப்தியாக இருந்தது. மியூசிக் அகதெமியில் என்பதுவயதை தாண்டிய இவரின் கச்சேரியை கேட்டேன். அங்கு வந்திருந்த தற்கால வித்வான்களின் அணிவகுப்பு வெளிப்படையாக தெரியும் சிறப்பை கட்டியம் கட்டி ஊர்ஜிதப்படுத்தியது. நிதானமான ஆனால் அலுக்காத, முறையான ஒழுங்கான, ஒவ்வொரு கீர்த்தனைக்கும் ஆலாபனையுடன், முடிந்தால் நிரவலுடன் பாடப்படும் இவ்வகை சங்கீதம் என்கு சென்றது? நாம் இழந்துவிட்ட ஒரு உல்லாசமான, மெதுவான நாட்களடங்கிய கடந்தகாலத்தை நினைவூட்டும் இவ்வகை சங்கீதத்தை ரிங்டோனில் கர்நாடக இசையை கேட்கும் இக்காலத்தில் சீக்கிரம் கேட்டுவிடவேண்டும். மொத்தமாக இழந்துவிடுவதற்குமுன்…

Posted in இசை Tagged: 2008 டிசம்பர் இசை கச்சேரிகள், 2008 டிசம்பர் சீசன், 2008 மெட்ராஸ் இசை விழா, கச்சேரிகள், சங்கீதம், சஞ்சய் சுப்பிரமணியன், சென்னை இசை விழா, சேஷகோபாலன், டி. எம். கிருஷ்ணா, பரசாலா பொன்னம்மாள், பிரசன்னா வெங்கட்ராமன், வசுந்த்ரா ராஜகோபால்

2008 டிசம்பர் மியூசிக் சீசன் கச்சேரி பட்டியல்
சென்னையின் (ஒரே) ஒரு USP, டிசம்பரில் சீசன் கச்சேரிகள். 2008-2009 டிசம்பர்-ஜனவரி சங்கீத சீசனில் நான் சென்று வந்த, கேட்ட, இசை கச்சேரிகள் பட்டியல் கீழே, சுருக்கமான விமர்சனங்களுடன். இவற்றில் ஒரு பெஸ்ட் பட்டியல் அடுத்த பதிவில்.

Dec 02

4pm – டி.எம்.கிருஷ்ணா – NGS – [பரவாயில்லை]

Dec 04

6:30 pm – பரத் சுந்தர் – BVB

Dec 13

7pm – சஞ்சய் சுப்பிரமணியன் – NCA – [அருமை]

Dec 14

4:30 pm – மாண்டலின் யு. ஸ்ரீனிவாஸ் – KGS – [சுமார்]

Dec 16

2pm – வசுந்த்ரா ராஜகோபால் – NGS [ review ]

4:15 pm – லெக்ஷ்மி ரெங்கராஜன் – MA [சுமார்]

7pm – விஜய் சிவா – MA [அருமை]

Dec 17

6:15 pm – சாத்தூர் சகோதிரிகள் – NI [சுமார்]

Dec 18

4pm – சித்திரவீணை என்.ரவிகிரன் – MA [சுமார்]

6:15 pm – ரீத்தா ராஜன் – NI [பரவாயில்லை]

Dec 19

9:15 am – ரமா ரவி – MA [பரவாயில்லை]

1:45 pm – சுமித்ரா வாசுதேவ் – MA [கிட்டதட்ட அருமையான ஷங்கராபரணம்]

4pm – ஓ.எஸ்.தியாகராஜன் – MA [சுமார்; மீண்டும் தோடியா?]

Dec 21

6 pm – டி.என்.சேஷகோபாலன் – MFAC [அருமை, அபாரமான RTP]

Dec 22

9:15 am – வேதவல்லி – MA [நன்று, அருமையான சிம்மேந்திர மத்தியமம் சுமித்ரா வாசுதேவிடமிருந்து (பின்பாட்டு)]

12 noon – சந்தீப் நாராயன் – MA [ம்ஹுஹூம்]

7pm – டி.என்.சேஷகோபாலன் – NCA [சுமார், சங்கீத நுணுக்கங்களுக்கு அருமை, எப்போதும்போல்...]

Dec 23

12:30 pm – பரத் சுந்தர் – NGS [நன்று]

2 pm – ஜெயஸ்ரீ அரவிந்த் – MA [சுமார்]

3 pm – பிரசன்னா வெங்கட்ராமன் – SH [அருமை, கிட்டதட்ட அபாரம்]

5 pm – ஸ்ரீவல்சன் மேனன் – MA [அருமை]

Dec 24

4:30 pm – டி.என்.சேஷகோபாலன் – KGS [சுமார், சங்கீத நுணுக்கங்களுக்கு அருமை, எப்போதும்போல்...]

Dec 25

3 pm – டி.என்.எஸ்.கிருஷ்ணா – KGS [சுமார்]

4:30 pm – சஞ்சய் சுப்பிரமணியன் – KGS [சுமார்]

Dec 27

4 pm – அருணா சாயிராம் – MA [ஐயகோ, பலருக்கு ஆஸம் (awesome), நான் உள்பட சிலருக்கு மோசம்]

7 pm – டி.எம்.கிருஷ்ணா – MA [அருமை]

Dec 28

10 am – வசுந்த்ரா ராஜகோபால் (உடன்) வேலுக்குடி கிருஷ்ணன் – VB [ review ]

7 pm – உன்னிகிருஷ்ணன் – MA [நன்று, சாருகேசி ராகம் ஆலாபனை சுயமான, சீரிய முயற்சி]

Dec 29

7 pm – சஞ்சய் சுப்பிரமணியன் – MA [அருமை, அருமையான தனி ஆவர்தணம்]

Dec 30

9:15 am – பரசாலா பொன்னம்மாள் – MA [நன்று]

4:15 pm – சங்கீதா சிவக்குமார் – MA [பரவாயில்லை]

7 pm – வசுந்த்ரா ராஜகோபால் – MA [ review ]

Jan 3

4:30 pm – ஸ்வர்னரேதஸ் – IITM-MC [பரவாயில்லை]

Jan 11

10 am – வசுந்த்ரா ராஜகோபால் (உடன்) வேலுக்குடி கிருஷ்ணன் – Nadopasana [அருமை]

கச்சேரி நடந்த சபாக்களின் விபரம்: NGS – நாரத கான சபா | NCA – நுங்கம்பாக்கம் கல்சுரல் அகதெமி, ராமாராவ் கலாமண்டபம் | KGS – கிருஷ்ண கான சபா | MA – மியூசிக் அகதெமி | NI – நாத இன்பம், ராக சுதா ஹால் | MFAC – மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் | SH – சாஸ்திரி ஹால் | VB – வித்திய பாரதி, பார்தசாரதி சுவாமி சபா | IITM-MC – ஐ.ஐ.டி.மெட்ராஸ் மியூசிக் கிளப் | Nadopasana – நாதோபாசனா, பி.எஸ். உயர்நிலை பள்ளி, ஆர்.கே.மட். ரோடு

Posted in இசை Tagged: 2008 டிசம்பர் இசை கச்சேரிகள், இசை கச்சேரிகள், கச்சேரிகள், கர், கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம்