ராண்டார் கை பேச்சு: தமிழ் சினிமாவும் அரசியலும்

2009 ஜனவரி 24

தமிழ் சினிமாவின் மூத்த வரலாற்றாலரான ராண்டார் கை நேற்று தமிழ் சினிமாவும் அரசியலும் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசினார்.  அதை பாட்காஸ்டாக, இரண்டு பகுதியில், கீழே கொடுத்துள்ளேன்.

பகுதி ஒன்று (~ 25 நிமிடம்)

பகுதி இரண்டு (~ 25 நிமிடம்)

ராமதுரை எப்படி ப்ரிட்டிஷர்களின் வாயில் ராண்டார் காய் ஆகி பிறகு அவரே போகட்டும் என்று ராண்டார் கை யாக மாற்றிக்கொண்டார் என்பது முதல் சிவாஜி எம்ஜிஆர் கூண்டுக்கிளி ஏன் ஊத்திக்கொண்டது, பக்கம் பக்கமாக உணர்ச்சிகரமாக வசனம் பேசி கண்ணகியில் நடித்த கண்ணாம்பாவிற்கு தமிழ் தெரியாது (கேமாராவிற்கு பின்னால் பலகையில் படித்ததாம்), சிவாஜி ஸ்கிர்ப்டெல்லாம் பார்க்காமல் உதவியாளார் ஒருமுறை படித்த வசனத்தை மொத்தத்தையும் சொல்லிவிடுவார், 1918ற்கு முன்னர் சென்ஸார் இல்லாதததால் 143 முத்தக்காட்சிகள் கொண்ட படம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி (141தான் இருந்தது என்று வக்கீல் நண்பர் தியேட்டர் மானேஜரை மிரட்டினாராம்), நிர்வாண நடனமெல்லாம் இருந்தது என்று பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

மொத்தம் 12 பேர் இருந்தோம்.

வெளியே வருகையில் பேச்சை வலையில் வைப்பதற்கு அனுமதிக்காக பேசுகையில் இந்த உற்சாக மனிதர் “Blog?, ya, I also write one” என்றார்.

ஒரு பதில் leave one →
  1. 2009 நவம்பர் 4

    there is now audio file

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS