புத்தக கண்காட்சியில் வாங்கியவை
சமீபத்தில் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் கீழே கொடுத்துள்ளேன்.
தொடர்ந்து தேய்த்ததில் கிரெடிட் கார்டிலிருந்து பூதம் கீதம் வந்துவிடப்போகிறதோ என்று உடன் வந்தவருக்கு சந்தேகம். வாங்கிவந்து ஒரு வாரமாகியும், ஜுரம் விட்டபாடில்லை. கார்ட் இன்னும் சூடாகத்தான் இருக்கிறது. வீட்டு நிர்வாகியும்தான்.
இனி பட்டியல்
சுஜாதா எழுதியவை
விசா பிரசுரத்தில்
- பிரம்மசூத்திரம் ஓர் எளிய அறிமுகம் (அவர் சகோதரர் எஸ். ராஜகோபாலனுடன் எழுதியது)
- வாரம் ஒரு பாசுரம்
விகடன் பதிப்பில்
- கற்றதும் பெற்றதும் பாகம் 3, 4 (1 & 2 ஏற்கனவே நெட்ரு)
உயிர்மை பதிப்பில்
- பார்வை 360 – சுஜாதாவின் திரையுலக அனுபவங்கள்
- ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்
- நானோடெக்னாலஜி
- உயிரின் ரகசியம்
- 60 அமெரிக்க நாட்கள்
- 401 காதல் கவிதைகள் – குறுந்தொகை ஒர் எளிய அறிமுகம்
- சீரங்கத்துக் கதைகள்
பழைய திருமகள் பதிப்பில் இல்லாத புதிய பத்து கதைகள் அடங்கிய புதிய பதிப்பாகையால்
- கணையாழியின் கடைசி பக்கங்கள் 1965-1998
பழைய திருமகள் பதிப்பில் ஒன்று இருந்தாலும் நேர்த்தியான உயிர்மை பதிப்பக அச்சில் வந்திருப்பதால். இதேபோல் துப்பறியும் சாம்புவை ஒரே தொகுப்பில் தடி அட்டையுடன் கிழக்கு பதிப்பில் பார்த்ததும் சபலம்தான்…ஏற்கனவே இரண்டு அல்லயன்ஸ் காப்பி வீட்டிலிருப்பதால் வாங்கவில்லை. முதலில் அவைகளை தொலைக்கவேண்டும்…
மற்றவர்கள் எழுதியது
உயிர்மை பதிப்பில்
- நவீன தமிழிலக்கிய அறிமுகம் – ஜெயமோகன்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு
- தமிழ் மொழியின் வரலாறு – வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்)
- அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசுவாமி – சா.கிருட்டினமூர்த்தி, மு.வளர்மதி, ஆ.தசரதன்
- பெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள் – தொகுதி 2 – மு. வளார்மதி
முதல் தொகுதி பதிப்பில் இல்லையாம். எல்லாம் விற்றுவிட்டதாம். கேட்க சந்தோஷமாக இருந்தது
Asian Educational Services
- History of the Tamils (from the earliest times to 600 AD) – P.T.Srinivasa Iyengar
இந்த புத்தகத்தின் தமிழாக்கம்தான் முதலில் கண்ணில் பட்டது. ஒரு சுற்று முடித்து வந்துவாங்கலாம் என்று தீர்மாணித்து, சுற்றுகையில் ஒரிஜினல் வேறு கடையில் மாட்டியதும் வாங்கிவிட்டேன். இதை படித்தபின் தேவையிருப்பின் தமிழாக்கத்தையும் வாங்கவேண்டும்.
எனி இந்தியன் பதிப்பகம்
- மறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக் கட்டுரைகள் – எஸ்.ராமச்சந்திரன்
அடையாளம் பதிப்பில்
- அடிப்படை தமிழ் இலக்கணம் – எம். ஏ. நுஃமான்
- மொழியும் இலக்கியமும் – எம். ஏ. நுஃமான்
- வ.அய். சுப்ரமணியம் கட்டுரைகள் – தொகுதி ஒன்று – மொழியும் பண்பாடும்
- வ.அய். சுப்ரமணியம் கட்டுரைகள் – தொகுதி இரண்டு – இலக்கணமும் ஆளுமைகளும்
காலச்சுவடு பதிப்பில்
- புதுமைப்பித்தன் கட்டுரைகள் (முழு தொகுப்பு)
- புதுமைப்பித்தன் கதைகள் (முழு தொகுப்பு)
- சுந்தர ராமசாமி – ஆளுமைகள் மதிப்பீடுகள்
விகடன் பிரசுரங்கள்
- ராஜு ஜோக்ஸ்
- தாணு ஜோக்ஸ்
- மதன் ஜோக்ஸ், மூன்று பாகங்களும்
- கோபுலு ஜோக்ஸ்
இதை மறுபடியும் வாங்கிவிட்டேன். காரணம்? ஏற்கனவே வாங்கியதை படித்து கொத்தாக சில்லறை பக்கங்களாக திருப்பிக்கொடுத்த நண்பரை கேட்டதில், பிபிபிரிரிரிரித்த்து வைத்து ஜெராக்ஸ் போட்டேன் என்று பதட்டமில்லாமல் கூறிச் சென்றார்.
- ஓ பக்கங்கள் – இரண்டு பாகங்கள் – ஞாநி
- சின்ன வயதினிலே – மெரினா
- உஷார்… உளவாளி – சுதாங்கன்
- ஃபைவ் ஸ்டார் பலகாரக் கடை – கிரேஸி மோகன்
- 3D கொண்டாட்டம் (குழந்தைக்காக என்று சொல்லி நான் படிக்க)
- டிசம்பர் தர்பார் – லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
இந்த களத்தில் ஒர் கட்டுரைகள் அடங்கிய புத்தகம் எழுத வேண்டும் என்ற என் எண்ணத்தை இவர் முந்திக்கொண்டுவிட்டாரே என்ற வயித்தெரிச்ச, ம்ம், ஆதங்கத்தில் என்னத்தான் எழுதியிருக்கிறார் என்று பார்க்க
அல்லயன்ஸ் பதிப்பில்
- சபாஷ் சந்துரு – ஜி.எஸ்.பாலகிருஷ்ணன்
- ஹாஸ்யக் கதைகள் – ரா.கி.ரங்கராஜன்
மணிமேகலை பதிப்பில்
- ஷங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் – பாகம் 2, 3
சிறு வயது கல்கண்டு வாசிப்பின் ஞாபகங்களை புதுப்பித்துக்கொள்ள வாங்கியவை. முதல் பாகம் போன கண்காட்சியில் வாங்கி படித்தும் விட்டேன்.
ஆக்ஸ்ஃபோர்ட் பிரசுரத்தில்
- Uncollected Poems and Prose A.K. Ramanujan – edited by molly Daniels-Ramanujan and Keith Harrison
- Man Eaters of Kumaon – Jim Corbett
சரி, முடிக்கும்முன் ஒரு டிஸ்க்லைமர்: வாங்கிய புத்தகங்களை நிச்சயம் அடுத்த வருட கண்காட்சிக்குமுன் படித்துவிடுவேன்.
போனமுறை சொன்னதுதான்.

வீட்டில் குளியல் அறை தவிர அனைத்து இடங்களிளும் புத்தகக் குவியல். கண்காட்சியை காணக்கிடைக்காதவர்கள் எங்கள் வீட்டிற்கு தாராளமாக வரலாம். வருபவர்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும். கிரெடிட் கார்ட் பூதத்தை சரிகட்ட வேண்டும்.
உங்கள் பதிவுக்கு முழுமையான ஓடை வழங்க முடியுமா? options-reading-syndication feeds-for each article – show full text . நன்றி
எம்மாஆஆடி!!!
Balaji: வருகைக்கு நன்றி
ravishankar: default செட்டிங்கை மறந்துவிட்டேன்…இப்போது சரி செய்துவிட்டேன்…என்ஜாய்
Dear Arunn
Un puthaga list parthen
Un puthaga kankatchi nee poi vanthapin matravarkalukku puthagam kaana katchiyaga irunthu irukum