சித்திரக்கலையில் மியூரல்ஸ் என்றால் சுவரோவியங்கள் அல்லது சுவர் சித்திரங்கள். இந்தியாவில் கோயில்களிலும் குகைகளிலும் வரையப்பட்டுள்ள பழங்கால சுவரோவியங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு, ராஜஸ்தானை அடுத்து, இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆசியாவில் இலங்கைக்கு அடுத்து புத்த, ஜைன, சைவ மதங்களின் சரித்திரமுக்கியம் வாய்ந்த பல ஓவியங்களை கொண்டுள்ளது. பல்லவர்கள், விஜயநகர ராயர்கள், தொடர்ந்து நாயக்கர்கள், பாண்டியர்கள், சோழர்கள், சேரர்கள் என்று கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டில் இருந்து பதிநேழாம் நூற்றாண்டு வரை, ஆயிரம் வருடத்திற்கும் மேலாக 140 தமிழ்நாட்டுக் கோவில்களுக்கு மேல், உட்கூரையிலும், பிரகாரச் சுவர்களிலும் சுவரோவியங்கள் விரவியிருக்கிறதாம்.
கலையறிவு அதீதமாக இல்லையெனினும், அதை கலை என்று புரிந்து மென்மையாக அணுகவேண்டிய மனிதர்களின் பொதுவறிவு கூட இன்றி, பக்தி என்று மஞ்சள்காப்படித்தும், ரெனொவேஷன் என்று சடுதியில் வெள்ளையடித்தும் எனாமலடித்தும் (எனாமலை எடுக்கையில் பின்னால் இருக்கும் சுவரோவியம் இலவசமாக உரிந்து வந்துவிடும்), ரெஸ்டோரேஷன் என்று மாற்றி வரைந்து முதலுக்கே உலைவைத்தும், இவ்வகை சரித்திர-கலைப் பொக்கிஷங்களை நாம் வேகமாக இழந்துகொண்டிருக்கிறோம். போறாக்குறைக்கு இச்சுவரோவியங்கள் உள்ள பல கோவில் பிரகாரங்களில், சுவற்றுக்கருகிலேயே தேங்கும் மதுபாட்டில்கள். இதுவரை இல்லையெனின், விரைவில், கலைகளில் சிறந்துவிளங்கியது மட்டுமின்றி, கலைகளின் மேல்காட்டும் இவ்வகை தேர்ந்த அக்கறையின்மையிலும் முதன்மையான இடத்தை பிடித்துவிடுவோம்.
read more…
திருக்குறளுக்குத்தான் எத்தனை பிரேமை தமிழ்கூறும் இணையுலகில். பத்தாவது பப்ளிக் எக்ஸாமில் அதிக மார்க் வாங்கவேண்டுமென்று பிற மொழிக்காக ஒன்றாவதிலிருந்தே தமிழை ஒதுக்காமல் பள்ளியில் ஒருபாடமாக படிக்கும் அநேகருக்கு முதல் மனப்பாடப்பகுதி குறள்தான். தமிழ் மத்தியமர் பலரின் முதல் இலக்கிய பகடியும் அங்குதான் தொடங்குகிறது.
அகர முதல எழுத்தெல்லாம் தகர ஸ்லேட்டில் எழுத வேண்டும் என்பதில் தொடங்கி, பெரியவர் ஆகி அலுவலகத்தில் டை கட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றவர் கைகட்டி பின் செல்வர் என்று நொந்துகொள்வது வரை குறள்தான் சுலப சுவைநீட்டல்களுக்கும், அவசர கவிதை சிதிலங்களுக்கும் வாகானது.
read more…
கொளை கதையை தொடர்ந்து படித்த அனைவருக்கும் நன்றி. நேரில் இதுவரை பார்க்காமலே, டுவிட்டரில் கதையை எழுதத்தூண்டிய @narain இணையத்தில் படித்து அவ்வப்போது உற்சாகம் கொடுத்த @orupakkam @scanman @isr_selva @icarusprakash மற்றும் பலருக்கு நன்றி.
சுயதம்பட்டம் என்று நினைக்காவிடில் ஒரு பின்னுரை. இது அப்ஸர்ட் ஜானரில் (absurd genre), மல்டி லேயர், எனும் பல்படிமக் கதை. துப்பறியும் மனித கொலைகள், தமிழ் கொளைகல், எழுத்து க்ளீஷே-கொலைகள், (அறிவியல்) மொழியாக்க கொலகள், திரைப்பட கொலைகள், இப்படி பல படிமங்கள். கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் யாவையும் எங்கோ, என்றோ, நடந்த உண்மையே. மேம்போக்காகத் தெரிவது எதுவும், சற்று யோசித்தால் அதுபோல் இருக்காது.
read more…
கண்விழித்தபோது எட்டாம் நம்பர் வார்டே பெண்டத்தால், புஷ்பம் கலந்த நாற்றமாய் இருந்தது. நாற்றம் என்றால் நறுமணம். கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ நாச்சியார் திருமொழி வகை நாற்றம். டேப்பில் அபிராமி அந்தாதி. என்னடா குணமாக்குறதுக்கு பதில், குணாவாக்கிட்டான்களா…
ஹலோ, மார்னிங்…
அருகில் ரோஜா நாற்றத்தில் டாக்டர் சாகடிக்காத கோஷ். வாழ்வளிக்கும் கோஷ். இளமை ஜோஷ். தேவையான வாளிப்புகளை வெள்ளை ஏப்ரனில் மறைத்து, கழுத்தில் தங்க ஸ்டெத் தொங்க (கணவர் பம்மல் சம்பந்தம் கொடுத்ததாம்), இளமையாய் சிரித்து, முதுமையாய் குனிந்தாள்.
மீண்டும் சிலிக்கன் வாலி.
read more…
சலூன் டி பாரீஸ். ஐந்து நட்சத்திர ராட்சஸகேளிக்கையின் வயிற்றில் முன்பசிக்காக கட்டிய லவுன்ஜில் அஜீரணமாய் இருக்கும் முடிதிருத்தகம். இங்கு அமர்ந்த திருக்கோலத்தில் பேச்சுலர் பலர். வீட்டில் பேச்சு இல்லாதவர்.
இதன் சலூனிஸ்ட் லோக்கல் பார்ட்டி. கத்திரியும் கையுமாக, முறுக்கான பாடி. முகத்தில் தாடி. நெற்றியில் பட்டை. கழுத்தில் ருத்திராக்ஷ கொட்டை. சலூனிஸ்ட் பேண்ட் போடுவான். ஜிப் போடுவான். சட்டை நடு இரண்டு பட்டன் மட்டும் போடுவான். மிச்ச சட்டையை கீழே முடிச்சுபோட்டிருப்பான். மேலே மார்ப்பின் உள்ளும் புறமும் தெரியும்படியாக உலாத்துவான். நாரீமணிகள் கிறங்குவர்.
மதுரை வீரன் எம்ஜீயார் போல ப்ளாக் அண்ட் வைட்டிலேயே வழு வழு தொடை மினுக்கித் தெரியும் குட்டைப்பாவாடை அணிந்து, நுணிநாக்கு ஆங்கிலம் பேசி, பார்க்க நன்னாக, சாரி, நன்றாக இருக்கும் யுவதிகள் சலூனிஸ்ட் விரிக்காத வலையில் விழுவர். இவன் கைத்தாங்கலாக வீடுவரை கூட்டிச்செல்வான். தன் வீடுவரை.
மறதி அதிகம்.
read more…
வாங்ஸ் கிச்சன். வேண்டாத இடங்களில் பளீரென்று வெளிச்சங்கள். வேண்டிய இடங்களில் சுவற்றில் அழுக்கை மறைக்க. ஆங்கிலம் பேசும் சர்வரிடம் லொடபடவா ஒரு ப்ளேட் ஆனியன் ரிங்ஸ், ரெண்டு கப் காப்பி என்றான்.
நடந்த காரணம்புரியாத கொளைகலின் துப்பேதும் துலங்காமல் எனக்கு இருந்த வெறி லொடபடவாமேல் திரும்பியது. ஏண்டா, தமிழ் தமிழ்னு சொலினுகுர. ரெண்டு கப் காப்பிங்கற. ரெண்டு கப் காப்பிகள் அப்டினு சரியா சொல்லு. வாரினேன் அவனை.
லொடபடவா கெட்டிக்காரன். அப்படியே பார்த்தாலும் ரெண்டு கப்கள் காப்பி அப்டினுதான் சொல்லனும்.
தொங்கிப்போனேன். எங்கேந்துறா உனக்கு இதெல்லாம் தெரியுது? அப்பாவா, தாத்தாவா, யார் கத்துகொடுத்தாங்கடா இத?
இல்லை. இது அப்பாவின் ஒன்றுவிட்ட நண்பர். பெயர், கந்தசாமி பிள்ளை. அவருடைய அப்பா என் தாத்தா வடுவூர் சாமித்துரைக்கு அவ்ளவா ஆகாது.
read more…
நேதனூரி கிருஷ்ணமூர்த்திக்கு பின்பாட்டு அவர் சிஷ்யர்கள் மல்லாடி சகோதரர்கள், வயலினில் ஸ்ரீராம் பரசுராம், மிருதங்கம் திருச்சி சங்கரன், கஞ்சீராவில் பி.எஸ்.புருஷோத்தமன். இரண்டு என்றும் ஒளிரும் நட்சத்திரங்கள், இரண்டு ரைசிங் ஸ்டார்ஸ். அருமையான செட். கச்சேரி சிறப்படைய முதல் தேவை பூர்த்தி. மேல் ஸ்தாயிகளில் சற்று தடுமாறினாலும் கிருஷ்ணமூர்த்தியின் குரல் அவர் சொன்னதை கேட்டது. அவர் இசையை நம்மை கேட்கவைத்தது.
வனஜாக்ஷி என்று கல்யாணி வர்ணம் தொடக்கத்தில் இருந்து ’சுந்தரத்தெலுங்கு’ கச்சேரி அமர்க்களம். வர்ணத்திற்கு முன் குறைவாக நிறைவாக ஆலாபனை. வர்ணத்தின் சிட்டைஸ்வரங்களை ஒட்டி நி யில் முடியுமாறு கமபத பொதிந்த கல்யாணி ஜீவஸ்வரங்களை பன்ச் அடித்துக்கொண்டே வந்த ஆவர்தன ஸ்வரகல்பனை. பிரமிப்பில் வயலினில் வாங்கி வாசிக்க வேண்டிய ஸ்ரீராம் பரசுராம் சற்று திணறிவிட்டார். மேடையில் வித்வான்களிடையே ஜெனரேஷன் இடைவெளி வயதில்மட்டுமல்ல.
read more…
ராச்சாண்டார் திருமலை இருட்டான பப்ளிக் நூலகம். இங்கு படித்து சிலர் மேதாவியாகி உள்ளனர். எம்பி பிஎஸ், எம்பி ஏ என்று தாவி தாவி ஆன மே(ல்)தாவி. பலர் இன்னமும் மேலும் கீழும் தாவிக்கொண்டிருக்கின்றனர். வேறு யாருக்கும் தெரியாமல்.
ஓரத்தில் மண்குவித்து, புதைக்கப்பட்டிருக்கும் மண்பானை. உள்ளே கலங்கலாக ஜில்லென்று ஜலம். பக்கத்தில் சங்கிலியில் கைதாகி ஜன்னல் கம்பியில் தொங்கும் அலுமினிய டம்ளர். வருகை பதிவு ஏடு. அருகில் புழுக்கூண்டு ஒரு பென்சில். யாரும் திருடிக்கொண்டு சென்றுவிடாமல் இருக்க நூலில் மூன்று முடிச்சு போட்டு லெட்ஜரின் கழுத்தில் தொங்கும். வெளிச்சமான ஜன்னல் அருகே நாளிதழை பெஞ்சில் பிரித்து வைத்து கவிந்திருக்கும் பல செல்ல தாத்தாக்கள். படிக்கும் பேப்பரை கேட்டால் பலூன்காரனிடம் சீப்ரேட்டில் வாங்கியதோ என்று சந்தேகிக்கும் காதில் கட்டிய மூக்குக்கண்ணாடியில் கண்ணால் மேலும் கீழும் பார்த்துவிட்டு சற்று தாமதித்து மறுநாள்தான் தருவர்.
read more…
இங்கு மாஸ் கன்சர்வேஷன் விதி வேலைசெய்யாதோ, இது மியூசிக் அகடமியில் நுழைகையில் அடிக்கடி வரும் சந்தேகம். வெளியே நிற்கும் கார்களைக்காட்டிலும் உள்ளே மக்கள் குறைவு. வித்வான் முக்கியமான மதுரங்களை நாம் சபையில் இல்லாதிருக்கையில் பாடிவிடுவாரோ என்று பதபதைத்து கான்டீனில் இட்லி-வடையை வேகமாக விழுங்குகையில் பொன்னம்மாள் கச்சேரியை தொடங்கிவிட்டார்.
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் நேரடி சிஷ்யையான பொன்னம்மாளின் சங்கீதம் நாம் இழந்துவிட்ட ஒரு உல்லாசமான, மெதுவான நாட்களடங்கிய கடந்தகாலத்தை நினைவூட்டும். வித்தியாசம், புதுமை என்று தியாகராஜருக்கு பேஸ்பால் தொப்பி அணிவிக்கும் இந்நாளிலும் மீண்டும் ஒரு முறை அவரை பாட அழைத்ததற்கு மியூசிக் அகடெமியை பாராட்டவேண்டும்.
read more…
விஜய் சிவா ராஹுல் டிராவிட் போல. மிஸ்டர் ரிளையபிள். என்று கேட்டாலும் கன்சிஸ்டென்ட்டாக ஒரு தரத்திற்கு மேல் கச்சேரி செய்வார். டோட்டல் பெயிலியர் என்று என்றும் கிடையாது. பாஸ் மார்க்கிற்கு மேல் எவ்வளவு என்பது அன்றைய தினத்தை பொறுத்தது.
சில பரிட்சைகளை எழுதுகையில் முதல் நாலைந்து கேள்விக்கு பதில் சட்டென்று கிடைத்து நொக்கிவிடுவோம். நிச்சயம் சென்டம்தான் என்று தலையை சிலுப்பிக்கொள்கையில், கடைசி இரண்டு மூன்று கேள்விகள் விடை தெரியாமல் தேங்கிவிடும். என்ன கர்ணம் போட்டாலும் சற்றென்று பதில் பிடிபடாது. மியூசிக் அகெதிமியில் அன்று நடந்தததில், கேதாரம், ஆனந்தபைரவி, கமனாஸ்ரமம், பைரவி என்று 60% கச்சேரி விஜய் சிவாவுடையது. சங்கரன்-சுரேஷ் தனி ஆவர்த்தனத்திற்கு பிறகு நாட்டைகுறிஞ்சி ராகம் தானம் பல்லவியில், ராகம் சரியாக பிடிபடாமல் கச்சேரி சுடு குறைந்தது. தனிவரை இருந்த கச்சேரி விறுவிறுப்பு அப்புறம் இல்லை.
read more…
சூலப்பொட்டுக்காரி. லிபர்டேரியன். ழ ள குழப்பத்தில் இன்று இரவு என்னை கொல்ல இருந்தவள். கிடந்தாள் தவம். மணந்தாள் என்னை. சாமியார் சொத்துக்காக. நா ஏதோ ராமனுக்காக ஜானகி இருந்த தவம் அப்டீன்னு நெனச்சுட்டிருந்தேன். சரிதான் போய்யா; என்னமோ அந்தப் பொண்ணு கொஞ்சம் சேப்பாயிருக்கு. நீ அதைப் பார்த்து மயங்கறே. சேப்பா இருந்தா ஆயிடிச்சா? லொடபடவா சொன்னது லேட்டாத்தான் புரிந்தது. ஆனால்… பெட்டர் லேட் தான் நெவர்…
அப்படி சற்று ரீவைண்ட் செய்தால், அன்று காலையும் செவ்வாய். மூன்றாவது கொலை நடந்த நாள். நான் அவைகள் கொலைதான் என்று ஊர்ஜிதம், சே, சரிபார்த்துக்கொண்ட நாள். செத்தது சாகடிக்கரா கோஷ். ழ ள குழப்பத்துல என்னை சாகடிக்க இருந்த கோஷ். இப்ப காக்கா வூஷ்.
read more…
ஒன்றுக்கொன்று ஸ்வர, லக்ஷண, ஜனக-ஜன்ய சம்பந்தம் உடைய இரண்டு ராகங்கள் கர்நாடக சங்கீதத்தில் அநேகம். இது இசையின் ஓசையின் குறையில்லை. இச்சங்கீதத்தினை வளர்த்த நம் முன்னோர்களின் நுனுக்கத்தின் நிறை. உதாரணமாக பூர்ணசந்திரிகா மற்றும் ஜனரஞ்சனியை எடுத்துக்கொள்வோம். இரண்டிற்கும் பல ஒற்றுமைகள். இன்றும் ஒன்றை பாடுகையில் ரசிகர்களுக்கு இன்னொன்றோ என்று தோன்றும்விதமாக பல கச்சேரிகளில் அமைந்துவிடும்.
read more…

